உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

“பொன்னேர் தருமேனியனே புரியும் மின்னேர் சடையாய் விரைகா விரியின் நன்னீர் வயல்நா கேச்சர நகரின்

மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே"

என்று திருஞான சம்பந்தப் பெருமானும்,

“விண்ணுலகின் மேலார்கண் மேலான்றன்னை மேலாடு புரமூன்றும் பொடிசெய்தானைப் பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத்தானைப் பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற்றானை உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்துமையோ டுடனாகி யிருந்தான்றன்னைத் தென்ணிலவு தென்கூடற் றிருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே

என்று திருநாவுக்கரசு நாயனாரும்,

“பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்க சைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர் முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடை யாள்பரவை யிவடன்மு கப்பே என்செய்த வாறடிகேள் அடியே நிட்டளங் கெடவே'

105

என்று சுந்தரமூர்த்திநாயனாரும் அருளிச் செய்தமை காண்க.

அனற் பிழம்பின் நிறம் பொன்வண்ணமாகலின் அதனுள் முனைத்து விளங்குஞ் சிவபிரானும் அவ்வண்ணம் உடையராக வழுத்தப்படுவாராயினர். இன்னும், ஞாயிற்று மண்டிலம் எஞ்ஞான்றும் மாறா இயற்கையனற்பிழம்பு வடிவாய்த் திகழ்வ தொன்றாகலின், இறைவன் எக்காலும் அதன்கண் விளங்கிய படியா யிருப்பரென்பது பற்றியே, காயத்திரி மந்திர வழிபாடு மிகச் சிறந்ததாக வைத்துப் போற்றப்படுகின்றது. இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் இறுதிப்பதிகத்தின் கண்ணதான அக்காயத்திரி மந்திரம் வருமாறு:

“ஓம்தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்யதீமஹி தியோயோந: ப்ரசோதயாத்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/138&oldid=1589333" இலிருந்து மீள்விக்கப்பட்டது