உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

  • மறைமலையம் 25

இது கழிபெருஞ் சிறப்பிற்றாகிய மந்திரமாய் யாவரானுங் கைக்கொள்ளப்படுதலின் இதன் சொற்பொருளும் பிறவும் ஈண்டு ஒரு சிறிது உரைக்கின்றோம்: ய:- எது, ந: - நம்முடைய,திய:- அறிவினை, பிரசோதயாத் - உந்துகின்றதோ, தத் - அந்த, ஸவிது:- ஞாயிற்றின்கண் விளங்கும், வரேண்யம் -வணங்கற்பாலரான, பர்க்க:- பர்க்கனென்னும் சிவபிரானுடைய, தேவஸ்ய அருளொளியினை, தீமஹி -நாம் நினைக்கின்றோம் என்றவாறு. மக்களறிவினை இயக்குவதாகிய செயல் ஞாயிற்றின் மேலும் ஞாயிற்றினு விளங்கும் சிவபிரான் மேலும் செல்லற் பாலதாம். ஞாயிறு புறத்தேயுள்ள ஒளிவடிவினது சிவபிரான் அதன் அகத்தேயுள்ள அருளொளி வடிவினர்; மக்கட்குப் புறஅறிவு விளங்குவதற்கு வாயிலாய் நிற்பது கண், அக அறிவு விளங்குதற்கு வாயிலாவது உள்ளம். இனிக் கண்ணறிவை விளக்குதற்கு ஞாயிற்றினொளி இன்றியமையாது வேண்டப் பட்டாற்போல, உயிரின் உள்ளறிவை விளக்குதற்கும் இறை வனது அருளொளி இன்றியமையாது வேண்டப்பட்டது. உயிரும் உடம்பும் பிரிவின்றி நிற்றல்போல, அவ்விரண்டனையும் ஒருங்கே விளக்கும் அகப்புற வொளிகளும் பிரிவின்றி நிற்றற்பொருட்டுச் சிவமும் ஞாயிறும் உடங்கியைந்து நிற்ப வாயின. இவ்வாறு நின்று புறத்தே கண்ணறிவினையும் அகத்தே உயிரறிவினையும் ஒரு காலத்து ஒருங்கு விளக்கும் ஞாயிறு சிவம் என்னும் இவ்விரண்டின் வழிபாடும் இக்காயத்திரி மந்திரத்தின் கண் ஒன்றாய் வைத்துரைக்கப்பட்டது.

L

இனி, உயிர் இல்வழி உடம்பு பயன் இன்றானாற் போல, இறைவனது அருளொளி இல்வழி ஞாயிறும் பயனுடைத் தன்றாம். எனவே, ஞாயிற்றின் விளக்கத்திற்கும் ஏதுவாய் அதனைப் பயன் படுத்துவதூஉம் அதன்உள் ஒளிரும் சிவவொளி யேயா மென்பது பெறப்படும். இவ்வுண்மை தேறமாட்டாதார் காயத்திரி மந்திரம் வெறும் பகலவன் வழிபாடே நுதலுவதெனக் கூறி அதனை முப்பொழுதும் பொருளறியாது உருவேற்றிப் பயன்பெறாது கழிவர்; இப்பெற்றிப் பட்டார்க்கு இரங்கிய யன்றோ,

"அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்கண் ஆவான் அரன்உரு அல்லனோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/139&oldid=1589335" இலிருந்து மீள்விக்கப்பட்டது