உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் கருத்தி னை அறி யார்கன் மனவரே'

என்று திருநாவுக்கரசு அடிகளும் அருளிச் செய்தனர்.

107

அற்றேல், இக்காயத்திரி மந்திரம் சிவபிரான் மேற்றாதல் எற்றாற் பெறுதுமெனின்; பர்க்கன் என்னும் பெயராற் பெறுதும்; பர்க்கன் என்னும் பெயர் சிவபிரான் ஒருவர்க்கே உரியதாதல் அமர நிகண்டினுட் காண்க.

இனி, மைத்திராயணீயோபநிடதமும் இக்காயத்திரி மந்திரப் பொருளை விரித்துரைத்து இதனைச் சிவபிரான் மேற்றாகவே வைத்து நிறீஇ விளக்குமாறுங் கடைப்பிடிக்க.“பர்க இதி ருத்ரோ ப்ரம்ம வாதிந:” என்று அவ்வுபநிடதம் முடித்துக் கூறுமாற்றால் பர்க்கன் உருத்திரனே எனத் தெளிவுறுத்தியது. மேலும், அது பர்க்கன் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் விரித்துரைக்குமாறும் நினைவுகூரற் பாலதாம். அச்சொல்லின் முதல் நின்ற ப என்னும் எழுத்து ஒளியினை உணர்த்துவதாகலின் ஞாயிற்று மண்டிலத்தின் நடுவணும் கண்ணின் கருவிழியிலும் விளங்குவோன் பர்க்கனாகிய சிவபெருமானே என்பது பெறப்படும்; இனி ஒளியினைக் கொண்டு அதனைத் தரும் பொருள் அறியப்படுதலால், ப என்னும் எழுத்து ஒளியினையும் க என்னும் எழுத்து அவ்வொளியினைத் தரும் சிவபிரானையுங் குறிக்கு மென்பது பெறப்படும்; இனிப், பர்க்கன் எனுஞ் சொற் செய்வது அல்லது வெதுப்புவது என்னும் பொருளையுந் தருதலால் அவ்வாற்றால் அஃது எவற்றையும் அழிப்பது அல்லது மலபரிபாகம் வருவிப்பது அல்லது அகத்தே உயிர்வளியி லியங்கி உயிர்கள் உண்ட உணவைப் பதப்படுத் துவது என்னுந் தொழில்களைப் புரிவோன் அவன் என்பதும் பெறப்படும்; இவையேயன்றி, ப என்னும் எழுத்து விளங்கச் செய்தல் எனவும், ர் என்னும் எழுத்து விரும்பச் செய்தல் எனவும், க என்னும் எழுத்து இடமாயுள்ளதெனவும் பொருடருதலின் தாமாகவே விளங்க மாட்டாத எல்லா உலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள்களையுந் தனக்கியற்கையாகவேயுள்ள ஒளியால் விளங்கச் செய்வோனும், அறியாமையாற் பற்றப்பட்டு ஒன்றினும் விருப்பின்றிக் கிடந்த உயிர்கட்குப் பொருள்கண் மாட்டு விருப்பினை ஏவி அறியாமையை அகற்றுவோனும், உயிர்கள் அழிப்புக்காலத்தில் ஒடுங்கிப் படைப்புக் காலத்தில்

பர்ச்சனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/140&oldid=1589337" இலிருந்து மீள்விக்கப்பட்டது