உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

❖ - 25❖ மறைமலையம் - 25

மீளத் தோன்றிப் பின்னர்த் தத்தங் கால எல்லையளவும் நிற்றற்கு நிலைக்களமாவோனும் பர்க்கனாகிய சிவபிரானே என்பது அறியற்பாற்று என்றும் அவ்வுபநிடதம் அறிவுறுத்துவதாயிற்று.

ம்

இருக்குமா மறையின்கட் போந்த காயத்திரிமா மந்திரப் பொருள் சாமவேத முடிபாகிய மைத்திராயணீயோப நிடதத்தாலேயே ஐந்திரிபின்றி இங்ஙனம் இனிது விளங்கப் பட்டுச் சிவபிரான் மேற்றாகவைத்து அறுதி கட்டப்பட்டமை யால், இம் மறை மொழியோடு முரணி இதற்கு வேறு வேறு

பொருளுரைக்கப் புகுவார் புன்செயல் ஒரு சிறிதும்

பயன்படாதென வுணர்க. தெனவுணர்க.

இங்ஙனம் உயிர்கட்குச் சேய்த்தாய் வானின்கண் இயற்கை யொளிப்பிழம்பாய்த் திகழும் ஞாயிற்று மண்டிலத்தினும், அவற்றிற்கு அணித்தாய் நிலத்தின்கட் செயற்கையாக வேட்கப்படும் வேள்வித் தீப்பிழம்பினும் சிவபிரான் முனைத்து விளங்குதல் பற்றியே அவனை 'முழுத்தழல் மேனிய' னாக வைத்து ஈண்டு அடிகள் அருளிச் செய்வாராயினர்,

அற்றேல் அஃதாக, கட்புலனாய் விளங்கும் தீப்பிழம்பின் கட் செந்நிறம் அல்லது பொன்னிறம் உண்மையினைத் தெளிக் காண்டும்; கட்புலனாகாமுதல்வற்கும் அந்நிறம் உண்டென்பது எற்றாற் பெறுதுமெனின்; அதனையும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுதும்; அறிவில்லாப் பருப் பொருள்கள் அத்துணையும் உருவும் நிறனும் உடையவாய்ப் புலப்படத் தோன்றுதற்குமுன் அவை நனி நுண்ணியநிலையில் அவ்விரண்டும் புலனாகாமல் நின்றன. அவை அவ்விரண்டும் உடையவாய்ப் புலப்பட்டுத் தோன்றுமாறு அவை தம்மைத் திரிபுபடுத்துவான் ஒரு முதல்வன் இல்வழி அவை தாமாகவே தோன்றமாட்டா. ஆதலால், எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் ஒருங்குடைய முதல்வன் அவற்றைத் தோற்றுவிக்கின்றுழி “இஃது இவ்வா றாகுக என்று தன் வ்வுலகமும் இவ்வுலகத்துப் பல் பொருள்களும் பல்வேறு ருவும் நிறனும் உடையவாயின. எனவே ஒவ்வொரு பொருளும் ஒவ்வோர் அமைப்பினைப் பெறும்முன் அவ்வமைப்பினை அதன்கட் டோற்றுவிக்கும் இறைவனது நினைவின்கண் அவ்வமைப்போடு ஒத்ததோர் உருவும் நிறனும் முற்கொண்டு அடைந்து கிடந்தனவாதல் துணியப்படும். யாங்ஙனமெனின், அழகிய ஒரு

6

நினைவாற் கற்பிக்க,

அந்நினைவின்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/141&oldid=1589339" இலிருந்து மீள்விக்கப்பட்டது