உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

109

மாளிகையினை அமைக்கலுறுவான் ஒருவன் முற்கொண்டு தன் நினைவின்கண் அதனை இவ்விவ்வாறு அமைக்கற்பாற்றென்று வகுத்து அங்ஙனம் வகுத்துக் கொண்ட நினைவி னுருவுக்குப் பொருந்த அதனை அமைக்குமாறு போலவும், ஓவியம் எழுதுதலில் வல்லான் ஒருவன் ஒரு வடிவினை வரைதற்குமுன் தன் நினைவினுள் அவ்வடிவினைத் தெளிவுடுத்திப் பின்னர் அதற்கேற்ப ஒன்றனைப் புறத்தே வரையுமாறு போலவும் என்பது.

ஆகவே, புறத்தேயுள்ள பொருள்கட்கு வடிவும் நிறனும் உளவாதல்போல அகத்தேயுள்ள உயிரின் நினைவிற்கும் உருவும் நிறனும் உளவாமென்பது பெற்றாம். பெற்றாமாயினும், பொருள்கட்குள்ள வடிவு நிறங்களின் இயல்பும், அறிவிற்குள்ள உருவு நிறங்களின் இயல்பும் வேறுவேறாமென்று உணர்ந்து காள்க. என்னை? பொருள்களின் வடிவு நிறங்கள் அப்பொருள்கள் அழியுங்கால் அவற்றோடு உடன் அழியும்; மற்று உயிரோ என்றும் அழியாது நிலைபேறாய் நிற்பதொன் றாகலின் அதன் நினைவின்கட் காணப்படும் உருவு நிறங்களும் அதனோடொன்றாய் என்றும் நிலைபேறாய் நிற்குமென்க. இனி, அறிவுடைய உயிர்களுள் எல்லாம் மிக்கதாய்ப் பேரறிவுக் களஞ்சியமாய் விளங்குவது இறைமுதற்பொருள் ஒன்றேயா மென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், அதன் நினைவின்கண் எல்லா உருவும் நிறனும் நிலைபேறாய் உளவா மென்பதூஉம், அவற்றிற் கேற்பவே மாயையிற் றிரண்டெழும் பொருள்கள் அத்துணையும் வடிவும் நிறனும் பெறுவனவா மென்பதூஉம், அங்ஙனமாயினும் முதல்வனது அறிவின்கட் காணப்படும் அவற்றினியல்பும் மாயையிற் காணப்படும் பிறவற்றி னியல்பும் தம்முள் வேறு வேறா மென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்க.

இது கொண்டு, அனற்பிழம்பிற்குச் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல் போல இறைவனது அறிவுருவிற்குஞ் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல் தேற்றமாம் என்க. இதுகொண்டு, அனற்பிழம்பிற்குச் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல்போல இறைவனது அறிவுருவிற்குஞ் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல் தேற்றமாம் என்க. அறிவுக்கும் உருவம் உண்டென்பது இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலார் செய்துபோதரும் ஆராய்ச்சிகளானும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/142&oldid=1589342" இலிருந்து மீள்விக்கப்பட்டது