உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

  • மறைமலையம் - 25

“சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும் உய்த்திடும் இச்சை செய்தி இறைஞானத் துளவோ வென்னின் எத்திற ஞான முள்ள தத்திறம் இச்சை செய்தி

வைத்தலான் மறப்பில் ஞானால் மருவிடுங் கிரியையெல்லாம்

என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டானும் அறிந்து கொள்க. இன்னும் இதன் விரிவைச் சிவஞான போத ஆராய்ச்சியுள் யாம் உரைத்தது கொண்டு கண்டு கொள்க.

33 அரியொடு பிரமற் களவறி ஒண்ணான்

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும், ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டி யன்றனக் குப்பரி மாவிற் றீண்டு கனகம் இசையப் பெறாஅ

தாண்டான் எங்கோன் அருள்வழி இருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்

-

-

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் - திருமாலு L டனேகூட நான்முகனாலும் அளவு அறியப் பொருந்தாதவன், நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் நரிகளைக் குதிரை களாக்கிய நலமும், ஆண்டு கொண்டருள அழகுறு திருவடி என்னுஞ் சொற்றொடரை அழகு உறு திருவடி ஆண்டு கொண்டு அருள என மாற்றி அழகு பொருந்திய திருவடியால் அடிமை கொண்டு அருளும் பொருட்டு எனப் பொருளுரைக்க. பாண்டியன் தனக்குப் பரிமா விற்று பாண்டிய மன்னனுக்குக் குதிரைகளை விற்று, ஈண்டு கனகம் இசையப் பெறாது அதற்காக அவன் தந்த திரண்ட பொன்னைப் பெறுதற்கு உடன்பாடுறாமல், ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப என்னையும் அடிமை கொண்டவனாகிய எம் அரசனது அருள் நெறியையே யான் நாடியிருக்குமாறு, தூண்டுசோதி தோற்றிய தொன்மையும் செலுத்தும் ஒளி வடிவினை அடியனேன் கண்ணெதிரே தோன்றச் செய்த பழைய தன்மையும் என்றவாறு.

‘அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான்' என்றது தேவர்களுள் மிக்க திருமாலும் நான்முகனுந் தாந்தாமே பெரியரெனத் தம்முட் கருதித் தருக்குதலான் அவரறிவுக்கும் எட்டாமல் அப்பாற்பட்டவன் றைவன் என்பதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/143&oldid=1589344" இலிருந்து மீள்விக்கப்பட்டது