உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

111

உணர்த்திய படியாம். இக்கருத்தினை யுட்கொண்டே ஈசாவாசி யோப நிடதமும் “தேவர்கள் அவனை அறிவோமென விரைந் தோடியும், அவன் அவர்கட்கு வேறாய் அவர்களை மேற்கடந்து போயினான்” என்று கூறுவதாயிற்று. யான் எனது என்னுஞ் செருக்கு அற்றவர்கட்கே இறைவன் றிருவடியைத் தலைக்கூடுதல் பொருந்தும் என்பதற்கு,

“யான்என தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் எனவும், (திருக்குறள் 346)

‘ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனின்

நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம்

அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல்இது

பெற்றார் பிறப்பற்றார் பின்”

எனவும்* (உண்மை விளக்கம் 35) போந்த திருவெண்பாக்களே சான்றாம்.

பிரமற்கு - பிரமனால்; உருபு மயக்கம்.

ஒன்றான் என்பது ஒண்ணான் எனத் திரிந்தது.

இறைவன் குதிரைச் சேவகனாய்க் குதிரையூர்ந்து வந்த பொழுது தேவரானுங் காண்டற்கரிய அவனுடைய திருவடிகள் தாமும் பாண்டியனும் கண்டுகளித்தற்கு எளியவாய் வந்த அருட்பான்மையினை வியந்து ஆண்டு கொண்டருள அழகுறு

திருவடி என்றெடுத்தோதினார்.

-

ஈண்டு கனகம் திரண்ட கொன்; ஈண்டு எனுஞ்சொல் இப்பொருட்டாதலை “ஈண்டிய, மழையென மருளும் பஃறோல்” என்பதன் (புறநானூறு 17) உரையிற் காண்க,

இறைவன் குதிரைகளைக் கொண்டு பாண்டியன்பாற் சென்றது பொன் பெறுதற் பொருட்டாகவன்றி, அடிகளை ஆண்டு கொள்ளுதல் பொருட்டாகவேயா மென்பது தெரிப்பார் “ஈண்டு கனகம் இசையப் பெறாது, ஆண்டான்” என்றருளிச் செய்தார்.

எல்லா உலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள்களையும் தனக்கே மெய்யுரிமையாகவுடைய முதல்வதற்குப் பாண்டியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/144&oldid=1589346" இலிருந்து மீள்விக்கப்பட்டது