உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

❖ LDMMLDMOLD - 25❖ மறைமலையம்

றருவதொரு பொருளு முண்டோ! ஆகவே, தன் அடியவரைக் காத்தல் வேண்டிக் குதிரை விற்றல் தலைக்கீடாக இறைவன் தோன்றினானென்பது.

பாண்டியன் தான்தந்த பொற்றிரளுக்கு ஈடாகக் குதிரை கொண்ர்வித்தல் வேண்டுமெனவும், அங்ஙனஞ் செய்யா தொழியின் தான் றந்த பொற்றிரளைத் திரும்பச் செலுத்துதல் வேண்டுமெனவும் வலியுறுத்தி அருளின்றி அடிகளை அளவின்றியே வருந்தாநிற்க. இறைவனோ அடிகள் பட்ட கடனைத் தீர்ப்பான் வேண்டி எவர்க்கும் அரிய தன்றிருவுருவை எல்லாருங் காணுமாறு காட்டிக் குதிரைமேற் கொண்டுபோந்து அவரை அத்துன்பத்தினின்றும் மீட்டுக் காத்தருளினானாகலின் எந்நிலையினுங் காத்தாட் கொள்ளும் அவ் ஐயன் அருள் நெறியே எக்காலும் விரும்பற்பாலதென்று உணர்த்துவார் ‘எங்கோன் அருள்வழி இருப்ப எனவும், அவ்வருணெறியை ருப்பஎனவும், விரும்புமாறு தூண்டுவதும் அவனருளே என்றுணர்த்துவார் 'தூண்டு சோதி' எனவும் அருளிச் செய்தார்.

-

தூண்டுதல் செலுத்துதல். இதற்கு இப்பொருள் உளதாதலைப் பிங்கலந்தையுட் காண்க.

அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்

அந்தணன் ஆகி - ஒரு பார்ப்பன வடிவினனாகத் தோன்றி, ஆண்டு கொண்டு அருளி - என்னை அடிமையாகக் கொண்டு அருள் செய்து, இந்திரஞாலம் காட்டிய இயல்பும் மாய வித்தை காட்டிய தன்மையும் என்றவாறு.

66

‘அந்தணர் என்பது அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப்பெயராகலின், அஃது அவ் அருளுடையார் மேல் அன்றிச் செல்லாது" என்று பரிமேலழகியார் உரை கூறுதலின் (திருக்குறள் 30) கால்வழி கால் வழியாய் அருளொழுக்கத்திற் றலைசிறந்து நிற்கும் பார்ப்பனர்க்கும் அந்தணர் என்னுஞ்சொல் உரித்தாயிற்று. இறைவன் ஓர் அந்தணன் வடிவிற்றோன்றிக் குருந்த மரத்தின்கீழ் வைகித் திருவாதவூரடிகளை ஆண்டு கொண்ட அருள் செய்தானென்பதனை முன்னே எனை யாண்ட, பார்ப்பானே எம்பரமா” என்று (புணர்ச்சிப் பத்து) அடிகள் பிறாண்டுங் கூறுதலாற் கண்டு கொள்க.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/145&oldid=1589348" இலிருந்து மீள்விக்கப்பட்டது