உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

113

ச்

இந்திர ஜாலம்' என்னும் வடசொற்றொடர் இந்திர ஞாலம் என மருவிற்று. வட மொழியில் ஜாலம் என்னுஞ் சொல் வலை என்னும் பொருளை உணர்த்துவதாகலின், இச் சொற்றொடர் இந்திரன் விரித்த வலை அல்லது இந்திரன் செய்த தந்திரங்கள் எனப் பொருள்படுவதாம். இந்திரன் தனக்கு மாறான அசுரரை அழிக்கும் பொருட்டுச் செய்த விரகுகள் மிகச் சிறந்தவாதல்பற்றி, அவை போன்ற மாய விச்சைகளும் செயற் கரிய செயல்களும் இந்திர ஞாலம் என்று வழங்கப்படுவவாயின. இறைவன் குருந்தின் கீழ்ப் பன்மாணவர் படைசூழ மக்கள் வடிவிற் றோன்றித் தம்மை அடிமைகொண்ட பின் மறைந் தருளின பான்மை அடிகட்குப் பெருமாயமாய்த் தோன்றினமை பற்றி அதனை இந்திரஜால மென்றுரைத்தருளினார். இதுவே அடிகட்குக் கருத்தாதல் “அந்தமில் பெருமை அழலுருக் கரந்து, சுந்தரவேடத் தொருமுதல் உருவு கொண் டிந்திரஞாலம் போலவந்தருளி" என்று இத்திருவகவலிற் பின்னருங்

கூறுமாற்றாற் பெறப்படும்.

மதுரைப் பெறுநன் மாநக ரிருந்து

45 குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும், ஆங்கது தன்னில் அடியவட் காகப்

பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்

மதுரைப்பெருநல்மா நகர் இருந்து - மதுரையாகிய பெரிய நல்ல சிறந்த நகரத்திலிருந்து, குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் - குதிரை ஆள் ஆகிய கோட்பாடும், ஆங்கு அது தன்னில் அடியவட்கு ஆக-குதிரையாள் ஆனதுபோலவே அம் மதுரை மாநகரில் அடியவளான பிட்டு வாணிச்சி பொருட்டாக, பாங்காய் மண்சுமந்து அருளிய பரிசும் - உரிமையாய் மண்ணைச் சுமந்தருளிய பண்பும் என்றவாறு.

‘சேவகன்' என்பது ஏவலாள் எனப் பொருள்படும் ஒரு

வடசொல்.

‘ஆங்கு’ வினையுவமத்தின்கண் வந்தது (தொல்காப்பியம் உவமயியல் 11) இது குதிரைச் சேவகன் ஆகி என்பதனை அவாவிநின்றமையின் அச்சொற் றொடரை வருவித்துக் 'குதிரைச்சேவகன் ஆகியாங்கு' என்று உரைக்க. இஃது இங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/146&oldid=1589350" இலிருந்து மீள்விக்கப்பட்டது