உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 25

பொருள்படுதலை அறியாதார் ‘ஆங்கு’ என்பதற்கும் மதுரை என்றுரைத்து அதுதன்னில் என்பதற்கும் மதுரையென் றுரைத்தார்.

-

பாங் கு உரிமை. இப்பொருட்டாதல் திவாகரத்துட் காண்க. பிட்டுவாணிச்சிக்கு உறவு உரிமையுடைய ஆள்போல் வந்தமையால் இங்ஙனம் கூறினார்.

உத்தர கோச மங்கையுள் இருந்து யீவத்தக வேடங் காட்டிய இயல்பும்

உத்தரகோச மங்கையுள் இருந்து - உத்தரகோச மங்கை யென்னும் ஊரிலிருந்து, வித்தக வேடம் - ஞானவுருவா ன கோலத்தை, காட்டிய இயல்பும் காட்டிய தன்மையும் என்றவாறு.

உத்தரகோச மங்கையில் அருந்தவம் ஆற்றிய அறுபத்து நான்கு முனிவரர் தமக்கு இறைவனே திருவுருக் கொண்டு எழுந்தருளி மெய்யறிவு கொளுத்தல் வேண்டுமென்று பெரிதுங் குறையிரப்ப, அவரது வேண்டுகோளுக்கு ஒருப்பட்டு ஐயனும் தனது திருவுருவினைக் காட்டி அவர் தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்தான் எனப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளை யாடற் புராணங் கூறாநிற்கும்*(வலை வீசின திருவிளையாடல்

22)

ச்

‘வித்தகம்’ வித் என்னும் முதனிலையிற் பிறந்து ஞானம் என்னும் பொருளை யுணர்த்தும் ஒரு வடசொல்; சொல்லுக்குப் ‘புகழ்மிக்க' என்னும் பொருளும் உண்டு.

உத்தரகோசமங்கை என்பது உயர்ந்த ஆகமநூல்களை வெளியிட்ட இடமாதல் பற்றி அப்பெயர்பெற்ற தென்பர். (வலை வீசின திருவிளையாடல் 23) உத்தர - உயர்ந்த, கோசம் -நூல். -

50

பூவணம் அதனிற் பொலிந்திருந் தருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும்;

பூவணம் அதனில் - பூவணம் என்னுந் திருப்பதியில், பொலிந்திருந்து அருளி - விளங்கியிருந்தருளி, தூவணமேனி தூய அழகினையுடைய திருவுருவினை,காட்டிய தொன்மையும் - காட்டிய பழமையும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/147&oldid=1589353" இலிருந்து மீள்விக்கப்பட்டது