உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

115

என்றது, பொன்னனையாள் என்னும் ஒரு பெண்மணி சிவபெருமானிடத்தும் அவனடியாரிடத்தும் அளவுபடாத மெய்யன்புடையளாய், நாடோறும் எதிர்ப்படுந் தொண்டர்க்கு அறுசுவையுணவு ஊட்டி ஒழுகி வருங்காற், சிவபெருமான் றிருவுருவினைப் பொன்னாற் சமைத்து வைத்து வழிபாடாற்று தற்கு மிக்க விழைவுடையளானாள்; தன்னிடத்துள்ள பொருள் திருத்தொண்டர் வழிபாட்டிற்கன்றித், தான் கருதிய திருவடை யாளம் அமைத்தற்குப் போதராமை கண்டு பெரிதும் வருந்திய உள்ளத்தளாய் இருப்ப, அஃதுணர்ந்து அவள் குறையினைத் தீர்ப்பான் வேண்டி இறைவனே ஒரு சித்தர் வடிவில் அவள்பாற் போந்து, அவள் இல்லத்தின் கணிருந்த இருப்பு முட்டுகளை யெல்லாம் ஒருங்கு தொகுப்பித்து, அவையெல்லாம் பொன் னாகுமாறு மருந்துபூசிக் கொடுத்து மறைந்தருள, அந்நங்கை இறைவனே தன் பொருட்டு எழுந்தருளிய பேரருட்டிறத்தை நினைந்து நைந்துருகிப் பின்னர் இறைவன் பணித்தவாறே அவற்றைத் தழலிற்பெய்து பொன்னாக்கியெடுத்துக், கைவல் பொற்கொல்லரால் அழகியதோர் இறைவனுருச் சமைப்பித்து அதனை வழிபட்டு உய்ந்த வரலாற்றினைக் கூறியவாறாம்.

இது மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு நாழிகை வழிகழிந்துள்ள திருப்பூவணம் என்னுந் திருப்பதியின் கண் நிகழ்ந்ததென்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறா நிற்கும். (பொன்னனையாளுக்கு அருள்புரிந்த திருவிளையாடல்)

பொலிதல்' விளங்குதல் எனப் பொருள்படுதலைச் "சேணிற்பொலி செம்பொன் மாளிகை" (திருச்சிற்றம்பலக் கோவையார் 23) என்பதற்குப் பேராசிரியர் கூறிய உரையிற் காண்க.

வண்ணம் ‘வணம்' என்று ஆயது “தொகுக்கும்வழித் தொகுத்தல்” வண்ணம் அழகு எனப் பொருள்படுதல் பிங்கலந் தையிற் காண்க.

-

மேனி - உடம்பு; பிங்கலந்தை.

வாத ஊரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/148&oldid=1589355" இலிருந்து மீள்விக்கப்பட்டது