உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

-

❖ - 25❖ மறைமலையம் – 25

வாத ஊரினில் - திருவாதவூரின்கண்ணே, வந்து இனிது அருளி வந்து இனிதாக அருள் செய்து, பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும் - திருவடியில் இட்ட சிலம்பின் ஓசையைக் காட்டிய தன்மையும் என்றவாறு.

என்றது: குறிப்பிட்ட நாளிலே குதிரை வரும் வரும் என்று பாண்டியவரசன் எதிர்நோக்கியும் வராமை கண்டு திருவாத வூரடிகளை அவன் வெகுண்டுரைக்க அவர் அதற்கு ஆற்றாது இறைவனைக் குறையிரந்து பாட, இறைவனும் நரிகளை யெல்லாம் பரிகளாக உருவுதிரித்துக் கொண்டு தானும் ஒரு புரவிமீ தூர்ந்து வருவான், முற்கொண்டு திருவாதவூரின் கண் வந்து வழி நோக்கிய அடிகட்கு அவ்வூரின்கட்டனது திருவடிச் சிலம்பொலியினைத் தோற்றுவித்தருளிய தோற்றுவித்தருளிய பான்மையை எடுத்துரைத்தவாறாம். இந்நிகழ்ச்சியும் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடலிற் கண்டு கொள்க. (நரி குதிரையான

திருவிளையாடல்14)

திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக்

55 கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்;

-

திருஆர் பெருந்துறை - அழகு நிறைந்த பெருந்துறையில், செல்வன்ஆகி ஆசிரியனாகத் தோன்றி, கருஆர் சோதியில் - எப்பொருட்கும் முதலாய் நிறைந்த பேர்ஒளியில், கரந்த கள்ளமும் - மறைந்த வஞ்சமும் என்றவாறு.

இறைவன் எல்லாம்வல்ல ஞானாசிரியனாய்த் திருப்பெருந் துறையில் எழுந்தருளித் தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்திய பின் பேரொளிப் பிழம்பில் மறைந்தமையினை ஈண்டுக் கூறினார். இதனை ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல் 54ஆம் செய்யுளிற் காண்க. (பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடற் புராணம்)

மெய்பொருளுணர்ச்சியாகிய கல்வி “கேடில் விழுச்செல்வ மாகலின் (திருக்குறள் 400) அதனையுடைய ஞானாசிரியனைச் ‘செல்வன்' என்றார். இனி, எல்லாச் செல்வமும் ஒருங்குடைய சிவபெரு மானே ஞான குரவனாய்த் தோன்றினமைபற்றிச் 'செல்வன்' என்றுரைத்தாரெனினுமாம். சிவபெருமானைச் செல்வன் என்றுரைக்கும் வழக்குப் பண்டைக்காலத்தே உண்மை

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/149&oldid=1589357" இலிருந்து மீள்விக்கப்பட்டது