உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவாசக விரிவுரை

117

'முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே” என்றும் பழைய தமிழ்ப்பட்டினுங் காண்க.

கரு முதற்பொருள் இறைவன் இயற்கையாகவே முனைத்து விளங்குதற்கு வாயிலாய் நிற்கும் விந்துவொளி எல்லாப் பொருள்கட்கும் முதலாய் அவற்றைத் தோற்றுவிப்ப தாகலின் அதனைக் ‘கருவார்சோதி' என்று கூறினார். இனிக் கரு' என்பதற்குப் பரமாணு எனப் பொருள் கொண்டு பரமாணுருவுருவாய் விளங்கும் ஒளி என்று அச்சொற் றொடர்க்குப் பொருளுரைத்தலுமாம். ‘கரு’ பரமாணு பொருள் படுதலை “கருவளர் வானத் திசையிற் றோன்றி" என்பதன் உரையிற் காண்க.

பூவலம் அதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாசம் ஆக்கிய பரிசும்;

வனப்

பூவலம் அதனில் பூவலம் என்னுந் திருப்பதியில், பொலிந்து இனிது அருளி - விளங்கி இனிதாக அருள்புரிந்து, பாவம் நாசம் ஆக்கிய பரிசும் தீவினையை அழித்த தன்மையும் என்றவாறு,

-

தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்

-

சயம்பெற தன் அடியவனான பாண்டியன் வெற்றி அடையுமாறு, தண்நீர்ப்பந்தர் வைத்து - குறிர்ந்த நீரினை உதவும் பந்தல் ஒன்று இட்டு, நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் - நல்ல நேரத்தில் நீரினைப் பருகத்தரும் ஆளாக உருவெடுத்த நன்றியும் என்றவாறு.

என்றது: பண்டொருகால் ஒரு பாண்டியன் சிவபெரு மானிடத்து மிக்க அன்பு உடையனாக ஒழுகிவருங்கால், அவன் காலத்திலிருந்த ஒரு சோழ மன்னன் அவனது அன்பின் நிறத்தைக் கேள்வியுற்று மகிழ்ச்சிமீக்கூர்ந்து, தன் மகளை அவற்கு மணஞ் செய்விப்பான் விழைந்து தக்கார் பலரை அவன்பால் உய்ப்ப, அவனும் உவகையோடு அதற்கு ஒருப் பட்டான். இச் செய்தியினை யுணர்ந்த அப்பாண்டிய அரசனின் தம்பி தீய இயல்பினனும் அஞ்சா ஆண்மையனு மாகலின் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/150&oldid=1589359" இலிருந்து மீள்விக்கப்பட்டது