உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

திருவாசக விரிவுரை

விருந்தினன் ஆகி வெண்கா டதனிற் குருந்தின் கீழ்அன் றிருந்த கொள்கையும்;

விருந்தினன் ஆகி

-

119

புதிதுவந்தோனாகி, வெண்காடு அதனில் - திருவெண்காட்டிலே, குருந்தின் கீழ் - குருந்தமர நீழலின் கீழ், அன்று இருந்த கொள்கையும் - அன்றொருகால் இருந்த கோட்பாடும் என்றவாறு.

பட்ட மங்கையிற் பாங்காய் இருந்தங் கட்டமா சித்தி அருளிய அதுவும்

-

-

பட்டமங்கையில் - பட்டமங்கை என்னுந் திருப்பதியில், பாங்காய் இருந்து உரிமையாய் எழுந்தருளியிருந்து, அங்கு அட்டமாசித்தி அவ்விடத்தே எட்டுப் பெரிய சித்திகளின் இயல் பினை, அருளிய அதுவும் - விரித்து உரைத்த அத்தன்மையும் என்றவாறு.

-

என்றது: முன்னொருகால் இறைவன் திருக்கைலை யிலிருந்து இயக்க மகளிர் அறுவர்க்கு அட்டமாசித்திகளின் இயல்பினை விரித்துக்கூறி வருகையில் அம்மாதரார் இடையே பராமுகமா யிருந்தனராக, அது கண்டு இறைவன் அவர்மேல் வெகுண்டு ‘நீவிர் பட்டமங்கலம் என்னும் ஊரில் வான் அளாவுங் கோடுகள் உடையதோர் ஆலமரத்தின் கீழ் கற்களாய் உருமாறிக் கிடக்கக்கடவீர்' என்று உரைப்ப, அது கேட்டு அம் மங்கையர் மிக நடுங்கி ஐயனை இறைஞ்சி ‘எம் பெருமானே, சிறியேங்கள் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்; அடியேங்கட்கு இட்ட சாபத்தைத் தேவரீரே போக்கி யருளல் வேண்டும்' என்று குறையிரப்ப, ஆண்டவனும் அவரது வேண்டுகோளுக்கு உவந்து நீவிர் அறுவரும் அங்கே கற்களாய்க் கிடக்குஞான்று, யாமே அங்குப் போந்து; நுஞ்சாபத்தினை ஒழித்து, நுமக்கு அவ் வட்டமா சித்தியின் இயல்புகளை மீண்டும் அறிவுறுத்துவேம் என்று புகன்று விடுப்ப, அவ்வறுவரும் பட்டமங்கையிற் போந்து ஒரு பெரிய ஆலின்கீழ் நீண்டகாலங் கற்களாய்க் கிடந்தனர். கிடப்ப, இறைவனும் மொழிந்தவாறே அங்கு ஆசிரியன் வடிவாய் எழுந்தருளி அவர்தம் பழைய உருவினை நல்கி அவர்க்கு அட்டமாசித்திகளையும் அறிவுறுத் தருளினன் எனப் பெரும் பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/152&oldid=1589364" இலிருந்து மீள்விக்கப்பட்டது