உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பாங்கு

-

  • மறைமலையம் 25

உரிமை. இயக்க மாதர்க்கு இறைவன் பண்டு மொழிந்தபடியே வந்து அவர்க்கு அருள் செய்தமையிற் "பாங்காயிருந்து" என்றார்.

66

'அணிமா மகிமா கரிமா இலகிமா, பிராத்தி, பிராகாமியம் ஈசத்துவம், வசித்துவம் ஆம்பெறக்கரிய அட்டமாசித்தி” என்பது திவாகரம்.

இவற்றுள் அணிமா என்பதுதான் மிகவும் நுண்ணிய அணுவளவாய்ச் சென்று மிகச்சிறிய உயிர்களுள்ளும் இருப்பது; மண்முதற் சிவதத்துவம் ஈறாகிய முப்பத்தாறு தத்துவங்களிலும் உள்ளும் புறமும் அகலாது நிறைந்திருப்பது ‘மகிமா’ என்னுஞ் சித்தியாம்; பேருமலையைப் போல் கனமாயிருக்கும், யோகியை எடுத்துத் தூக்கினால் மிக இலகுவான அணுவைப் போற் காணப்படுதல் இலகிமா என்னுஞ் சித்தியாம்; இலகுவான அணுப் போல் இருக்கும் அருந்தவனைக் கையிலெடுத்தால் மேருமலையைப் போற் கனமாயிருப்பது 'கரிமா' என்னுஞ் சித்தியாம்; பாதல உலகத்திலிருந்து நான்முகனுலகிற் புகுதலும், மீண்டும் நான்முகனுலகிலிருந்து பாதலம் அடைதலும் ‘பிராத்தி’ என்னுஞ் சித்தியாம்; வேற்றோர் உடம்பிற் புகுதலும், வானுலகில் இயங்குதலும், விரும்பிய இன்பங்களையெல்லாம் தானிருக்கு மிடத்திருந்தே நினைந்தாங்கு விருவித்து நுகர்தலும் பிராகாமியம் என்னுஞ் சித்தியாம்; வானின்கண் உள்ள ஞாயிறு தன்னிடத்துள்ள ஒளியால் உலகத்துள்ள எல்லாப் பொருள் களையும் விளக்கித் தன்னையும் விளக்குதல்போலச் சிவயோகி தன்னகத்துள்ள ஒளியால் முக்கால நிகழ்ச்சிகளையும் வானு லகின் பொருள்களையும் தான் இருக்குமிடத்திருந்தே உணர் தலும் பிராகாமியம் என்ப; இறைவனைப்போலத் தான் விரும்பியபடி முத்தொழில்புரிந்து ஒன்பது கோள்களுந் தான் விய பணிகேட்பத் திகழ்வது ‘ஈசத்துவம்’ என்னுஞ் சித்தியாம்; அரக்கர் விலங்கு புள் பூதர் மக்கள் இந்திரன் முதலான எண்டிசைக் காவலர் எல்லாம் தன்வயமாய்நிற்கத் தான் அவற்றை யாளுதல் ‘வசித்துவம்' என்னுஞ் சித்தியாம். இவ் வெட்டுச் சித்திகளையும் இவ்வாறு விளக்கிக் காட்டும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம்.

வேடுவன் ஆகி வேண்டுருக் கொண்டு காடது தன்னிற் கரந்த கள்ளமும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/153&oldid=1589366" இலிருந்து மீள்விக்கப்பட்டது