உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

121

வேடுவன் ஆகி - வேடன் ஆகி, வேண்டுஉருக்கொண்டு தான் விரும்பியதோர் உருவத்தினை மேற்கொண்டு, காடாது தன்னில் கரந்தகள்ளமும் - காட்டின்கண்ணே மறைந்து போய் வஞ்சமும் என்றவாறு.

என்றது: முன்னொருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் தன் வலிமையினைத் தானே வியந்த செருக்குடையனாய் மேல்பால் கீழ்பால் வடபாலுள்ள நாடுகளின்மேலெல்லாம் படையெடுத்துச் சென்று அவற்றின்கண் இருந்த அரசரை யெல்லாம் வென்றி கண்டு, பின்னர்த் தென்னாட்டின்மேல் வருவானாயினான். அஞ்ஞான்று மதுரையில் அரசுவீற்றிருந்த பாண்டியமன்னன் சிவபெருமான் மாட்டு மெய்யன்பு உடைய னாகலின், சோழன் தன்னை எதிர்க்க வருதலை யறிந்து, ‘உற்ற விடத்துதவுவோன் இறைவனே யன்றிப் படைகள் அல்லா மையால் யாம் சிவபிரானிடத்து இதனைச் சென்று அறிவிக்கற் பாலம்' என்று உட்கொண்டு திருக்கோயிலிற் சென்று உள்ளங் குழைந்துருகி ஐயனுக்கு அதனை அறிவித்தான்.

-

அவனறிவிப்பி னைத் திருவுளத்தேற்ற பெருமான் ‘நீ நின்படையொடு சென்று இளையாது அவனோடு போர்புரிதி' வேந்தரெல்லாங் கொண் டாட நினக்கே யாம் வென்றி தருகுவம், என்றொருசொற்றோற்று விக்கப் பாண்டியனும் அச்சொல் வழியே தன் படையொடு சென்று அவனோடும் பொரு வானாயினன். இறைவன்றிரு வருளால் பாண்டியன் கொண்டு சென்ற சிறுபடை பெரும் படையாய்த் தோன்றச் சோழன் உய்த்துவந்து வலிய பெரும் படை அதன்முன் நிற்கலாற்றாது புறங்காட்டி யோடியது. அது கண்ட சோழன் தன் பரியினை ஊக்கி முன்னேறிப்போந்து பாண்டியனோடு எதிர்க்கும் அளவில், பாண்டியன் ‘என்னை யாளுடைய ஐயனே நின தேவலால் யானும் எதிர்க்கின்றேன்' எனக் கூறி முற்செல்ல, அன்பர்க்கு அணுக்கமாயுள்ள பெருமான் ஒரு வேடனுருக் கொண்டு குதிரையூர்ந்து வந்து பாண்டியனைப் பின்றள்ளி முற்போந்து சோழன் ஏறி நிற்குங் குதிரை முகத்தில் ஒரு வேற்படையினை யெறிய, அதுகண்ட சோழன் ‘நின்னைக் குதிரையோடும் பிடிப்பேன்' என்றுரைகூறித் தொடர, ஐயனும் அவனுக்கு இளைத்து ஓடுவான்போற் பரியினை ஏவி மதுரை நோக்கிப் போகச், சோழன் வென்றிபெற்றாலென உள்ளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/154&oldid=1589369" இலிருந்து மீள்விக்கப்பட்டது