உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

  • மறைமலையம் – 25

கிளர்ந்து அவனை விரைந்து பின்றொடர்ந்தேக, அவனும் மதுரைக்கு மேல்பால் உள்ள ஓர் ஆழ்ந்த மடுவிற் குதிரையோடும் வீழ்ந்து மறைய, அவனைப் பின்றொடர்ந்து சென்ற சோழனும் வந்தவிரைவாற் குதிரையோ டதன்கண்வீழ்ந்து மாண்டான் எனப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறும்.

'வேடுவனாகி' என்றதும் 'வேண்டுக் கொண்டு' என்றதும் ஒன்றனையே உணர்த்தின; வேடுவனானது அப் பொழுதிற்குத் தான் வேண்டியதோர் உருவமாதலின் அங்ஙனங் கூறினார். இனி, ஆகி' என்பதைச் செயவெனெச்சத் திரிபாகக் கொண்டு வேடுவனாக வேண்டுருக்கொண்டு' வைத்துப்

பொருளுரைப்பினுமாம்.

என்று

சோழனை மடுவில் வீழ்த்திய இடம் அக்காலத்துக் காடாயிருந்தமையாற் போலும் அடிகள் “காடது தன்னிற் கரந்த கள்ளமும்” என்றோதினார்.

மெய்க் காட்டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;

கொண்டு

-

மெய்க் காட்டிட்டு-உண்மையைக் காட்டி, வேண்டு உருக் தான் விரும்பியதோர் உருவினை மேற்கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் ஆ ஒருவனாய்த் தோன்றிய தன்மையும் என்றவாறு.

-

தகுதியுடையோன்

என்றது : பண்டைக்காலத்து அரசு புரிந்த பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அன்பிற் சிறந்த படைத்தலைவனாய் வயங்கிய சுந்தரசாமந்தன் என்னும் பெரியோன் சிவபிரானி டத்தும் அவனுக்கு மெய்யன்பராயினாரிடத்தும் பேரன்புடைய னாய் ஒழுகி வருகையில், சேதிபர்கோன் என்னும் பெயர் பூண்ட ஒரு வேட்டுவ அரையன் தனக்குள்ள பெரும்படைகளின் வலியால் இறுமாந்து அப்பாண்டிய வேந்தன்மேல் வந்து எதிர்க்க ஒழுங்கு செய்வான் புக்கனன். ஈதுணர்ந்த பாண்டிய மன்னன் துணுக்குற்றுத் தன் படைத்தலைவனை விளித்து அதனை யறிவித்துத் தமக்கு பெரும்படை யின்மையின் அதனைத் திரட்டுதற்குக் களஞ்சியத்தைத் திறந்து வேண்டும் பொருள் எடுத்துக்கொள்ளுமாறு கற்பிக்க, அவனும் அங்ஙனமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/155&oldid=1589370" இலிருந்து மீள்விக்கப்பட்டது