உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

123

பொதி பொதியாகப் பெற்றிரள் எடுப்பித்து வந்து அவந்நை நோக்குதலும், அவை சிவனடியார்க்குப்

வேண்டுமென எண்ணினான்.

பயன்படல்

எண்ணி யாங்கே, நாடோறும் சிவனடியாரைத் தொகுதி தொகுதியாக வருவித்து அவர்தமக் கெல்லாம் அறுசுவைக் கறியும் அடிசிலும் உவந்து ஊட்டிவர, ஆறுதிங்களில் அரசன் றந்த பொருளெல்லாம் அழிந்தது. ஆறு திங்கள் சென்றதும் அரசன் படைத்தலைவனை அழைப்பித்துப் ‘படைகள் எவ்வளவ தொகுப்பித்தனை?' எனக் கேட்ப, அவனும் ‘அடியாரக்கெளிய வனான சிவபிரான் உளன். அடியனேன் கருத்தினை அவன் முடிப்பான். வேண்டியபொழுது படைகள் வரும்' என்று விடைகூறப், பெயர்த்தும் அரசன் ‘நாளைக் காலையில் நீ தொகுப்பித்த படைகளை மெய்க்காட்டு' என்று பகர்ந்து விடுப்பச் சாமந்தன் ‘என் செய்வேன்' என நைந்து இறைவன் றிருக்கோயிலினுட் புகுந்து பெருமானுக்குத் தன் குறையினைச் சொல்லியிரக்க, ஆண்டவனும் ‘நீ உளம் வருந்தற்க. வேண்டும் படையெலாங் கொண்டு நாளைக்காலையில் கொற்றவன் காண வருவேம்' என ஒரு சொற் பிறப்பிக்க, அவனும் மனந்தேறி மற்றைநாட் காலையில் அரசர்முன் போதருமளவில் எம்மருங்கும் பல்லியங் கறங்கப் பெரும்படைச் சாத்துவர,அரசன் அத்திரளைக்கண்டு வெருவி எதிர் குறுகிய படைத்தலைவனை னாவ, 'நாம் தொகுப்பித்த படை, வேந்தே அஞ்சற்க' என்றுரைத்து, அணுகிய படையினை எதிர் நிரலேநிறுத்தி வகுத்து அவற்றின் மெய்ம்மையைக் காட்டியிட்டான்.

பாண்டிய மன்னன் அவற்றின் சிறப்பெல்லாங் கண்டு மகிழ்ந்து, அப்படைகளின் நடுவேநின்ற மற்றொரு தலைவனது -ருவினைக் கண்டு வியந்து அவனை அவனால் அருகழைத்து நோக்கிக் கரையிகந்த களிப்பெய்தி அவற்குப் பொற்றூசு அளித்து, அவன் பரியுகைக்குமாறெல்லாங் கண்டு இறும்பூது யெய்துகையில், வேவுகாரர் சிலர் போந்து ‘படையெடுக்கத் துணிந்த வேட்டுவ மன்னனாகிய சேதிபர்கோன் ஓர் அரிமாவாற் கோள் இழைக்கப்பட்டு உயிர்துறந்தான்' என்க கூறக்கேட்ட பாண்டியன்,தன் யன், தன் படைத்தலைவனை நோக்கி ‘இதுவுந் திருவருட் ‘இதுவுந்திருவருட் டிறமே போலும்! இக்கொடும் பகைவன் ஒழிந்தமையால் இப்பெரும் படைஞரை வருத்துதல் எற்றுக்கு! இவர் தத்தம் நாடு நோக்கிச் சொல்லிவிடு' என்று சொல்லி அவனை ஏவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/156&oldid=1589372" இலிருந்து மீள்விக்கப்பட்டது