உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 25

கோடலே இயைவதாமெனின், அங்ஙனங் கூறுமிடத்தும் பிறவற்றை அன்போடு நினைந்து பார்த்து அவற்றின் துயர் துடைத்தற் பொருட்டு இறைவற்கு ஓர் உருவம் இன்றியமையாது வேண்டப்படும். என்னை? உருவம் இல்லையேல் அறிவும் இல்லை யென்றே முடிக்கப்படுமாகலி னென்க. தொன்று தொட்டே உள்ள எங்கள் சமய நூல்கள் இறைவன் உண்டென்பதைத் தேற்றுமெனின், ஒருவரால் ஆக்கப்படாமல் அந்நூல்கள் பண்டே உளவென்பது சால அழகிது! மேலும் அந்நூல் கொண்டு இறைவனையும், இறைவனைக் கொண்டு பின்னர் அந்நூலினையும் அறிந்தோமென்றல் 'ஒன்றனை யொன்று பற்றுதல்' என்னுங் குற்றமா மென்க.

இனிப் புன் மரம் முதலியவற்றை உயிருடைப் பொருள் என்பதும் ஆகாது. அவை நிலம் நீர் தீ வளி என்னும் நாற்பொருளுருவினையே தமக்கும் உருவெனப் பெற்றுப் பலவேறு தொகுதிகளாய்ப், புற்றும் மயிருங் கொம்பும் உயிரின்றியே தோன்றிமாய்தல் போலத் தாமுந் தோன்றி மாயும். முட்டையினும் வியர்வையினும் கருப்பையினும் பிறக்கும் ஏனையுயிர்களுக்கு அப்புன்மரம் முதலியன உணவாய்ப் பயன்படும் அத்துணையேயன்றி அவை தமக்கென வேறு உயிருடைய அல்ல வென்றுணர்க.

ஆகாது.ஆயினுங்

இனி, ஓருயிரையுங் கொல்லுதல் ஆகாது. ஆயினுங் கால்லப்பட்டவைகள் உயிர் இன்மையால் மண்ணோடொக்கு மாகலின் அவற்றைத் தின்பது குற்றமாகாது. அற்றன்று தின்பார்க்கு ஊன் தரற் பொருட்டே விற்பார் உயிருடைப் பொருளைக் கோறலின், தின்பார்க்கும் அதுகுற்றமாமெனின், நறுமணம் ஊட்டிய தண்ணீர்ப் பந்தர் வழியடை வைத்தார்க்கே நல்வினை விளையு மென்பாரல்லது, அப்பந்தரின்கண் அந்நறு நீரைப் பெற்றுப் பருகுவார்க்கு அந்நல்வினை விளையுமெனக் கூறுவாரைக் கண்டிலமாகலின், கொலைவினையையுஞ் செய்தார்க்கே அது குற்றமாவதன்றி அதனாற் பெறப்படும் ஊனைத் தின்றார்க்கு அது குற்றமாகா தென்பது தெளியப்படும்.

வி

இனி மேற்கிளந்தெடுத்துரைத்த உருவம் முதலிய ஐந்து கந்தங்களும் (ஐந்து கந்தங்களுள் உருவக் கந்தம் பொருளுரு நான்கும் பண்புரு நான்குமென எட்டாம்; வினைக்கந்தம் இன்பமுந் துன்பமும் இன்ப துன்பமும் என மூன்றாம்; குறிப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/227&oldid=1589459" இலிருந்து மீள்விக்கப்பட்டது