உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

திருவாசக விரிவுரை

195

கந்தம் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறியும் அவற்றொடு கூடிநின் றறியும் மனமுமாம்; எண்ணக் கந்தம் மனமொழி மெய்களைப் பற்றி வரும் அறமும் மறமுமாம்; அறிவுக்கந்தம் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் எனும் ளி ஐந்துணர்வும் சித்தமும் ஆகும். இவற்றுள், மனமொழி மெய்களைப் பற்றி வரும் அறம் பத்தும் மறம் பத்து மென எண்ணக் கந்தம் இருபதாம் என்பர்; அவை வருமாறு : கொலை நினைவு, காமப்பற்று, அவா என மனத்தைப் பற்றிய மறம் மூன்று : பொய் கூறுதல், கோட் சொல்லுதவ், சினந்து பேசல், பயனில மொழிதல் என மொழியினைப் பற்றிய மறம் நான்கு; களவு செய்யப் போதல், வீண் டொழில் புரிதல், கொலை புரிதல் என மெய்யினைப் பற்றிய மறம் மூன்று; அருள் நினைவு, அவா அறுத்தல், தவப் பற்று என மன அறம் மூன்று; மெய்யுரை நல்லுரை, இன்னுரை,பயனுரை என மொழியறம் நான்கு; பள்ளி வலம் வரல், தவம் புரிதல், ஈதல் என மெய்யறம் மூன்று.) ஒருங்குகூடி வழிமுறையே தோன்றிக் கெடுவது கட்டுக்கு ஏதுவாய துன்பமாகலின், அவைமுற்றும் பொன்றக் கெட்டு அடைவதே வீட்டின்பமெனத் தெளிதல் வேண்டும். நன்மையை யழிக்கும் இணைவிழைச்சு சினம் செருக்கு அழுக்காறு அவா பொருட்பற்று என்னும் அறுவகைக் குற்றங் களையுங் களைந்து, நல்ல அறச்செயல்களை நிறையப் புரிந்து, இழிக்கத் தக்க ஐம்புலன்களை அறுத்து, இன்ப துன்பங்களைக் கைவிட்டு நற்காட்சி நல்லூற்றம் நல்வாய்மை நற்செய்கை நல்வாழ்க்கை நன்முயற்சி நற்கடைப்பிடி நல்லுளத்தோர் தலைப்பாடு என்னும் பழிப்பில்லாத வாழ்க்கை எட்டையும் வளரச்செய்து இவற்றிற்கு மாறான தீயவாழ்க்கை எட்டையும் ஒழித்து அறிவொழுக்கத் திற்றலை நிற்கும் முடிந்த நிலையே வீடுபேற்றுறுதியாம் என்பர்.

னிப் பௌத்தரில் யோகாசாரர் என்பார் சௌத்தி ராந்திகர் கூறுவன வெல்லாம் பெரும்பான்மையும் உடன்பட்டு, அதற்கு மேற் புறப்பொருளுண்மை கொள்ளாதாராவர். அகத்து நிகழும் அறிவே புறத்துள்ள பொறிகளுமாய் அப்பொறிகட்குப் புலனாகும் பொருள்களுமாய்த் தோன்றுதலானும், அவ்வறிவு தானும் ஐம்பொறிப் பழக்கத்தாற் கூடிவருவதொன்றாகலானும், அதுவும் அருவேயன்றி உருவுடைத்தன்றாகலானும் அவ்வறிவின் றோற்றமாய்ப் புறத்தே காணப்படும் உலகம் கனவு போற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/228&oldid=1589460" இலிருந்து மீள்விக்கப்பட்டது