உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

  • மறைமலையம் - 25

பொய்ப்பொருளேயாமென்று துணியப்படும். உண்மையில் உளதாவது அறிவு ஒன்றுமேயன்றிப் பிறிதேதுமில்லையென்பர்.

இனிப் பௌத்தரில் மாத்தியமிதகராவார் சௌத்தி ராந்திகர் கூறுவனவற்றிற் பல கைக்கொண்டு சில கைக்கொள் ளாதார் ஆவர். கண்முதலான பொறிகளின் வாயிலானன்றிப் பொருள்கள் உணரப்படாமையாற் பொருளென வேறொன் றில்லை, பொறிகளேபொருளென் றுணர்தல் வேண்டும். பொறி கள் அழிந்தாற் பொருள்களும் இல்லையாம். பொருள்கள் இல்லாதொழியவே அவற்றின் வழிவரும் அறிவும் இல்லையாம். இவர்கள் உயர் உளதும் அன்று இலதுமன்று, நிலைபேறு டையதுமன்று. அஃது இலதும் அன்று எனக் கூறுவர்.

இனிப் பௌத்தரில் வைபாடிகமிகராவாரும் சௌத்தி ராந்திகர் கூறுவனவற்றுட் பல தழீஇக்கொண்டு, மேலுஞ் சில கூறுவர். மஞ்சளுஞ் சுண்ணமும் விரவியவழிப் பிறந்த சிவப்பு நிறம்போல உலகமும் உலகத்துப் பொருள்களும் பொறியுணர்வு விரவலால் உளவாய்த் தோன்றுதலின் அவை இலவென்று கூறுதல் மாறுகோளுரையா மென்பர்.

இங்ஙனங் கௌதமபுத்தர் மாணாக்கர் நால்வகைப்பட்டுத் தம் ஆசிரியன் அறிவுறுத்த கோட்பாட்டினைத் தத்தமக்கியைந்த வாறு நால்வேறு வகைப்படுத்து வழங்கினமையிற் பௌத்தமதம் ஒன்றே அவரவர் கருத்துவகையால் நால்வேறு பகுப்பாய்ப் போதரலாயிற்று. அவ்வாறாயினும், எல்லாப் பொருள்களுங் கணங்கடோறும் மாய்ந்துமாய்ந்து வருமென்பதூஉம், கடவுளும் உயிரும் இல்லை யென்பதூஉம் இவர் தமக்கெல்லாம் பொதுக் காள்கைகளாகலானும். அவாவவறுத்தல் ஒன்றையே வீடு பேற்றுதிப் பயனாக்கொண்டு அங்ஙனம் வீடுபெற்ற புத்த முனிவனையே தமக்கு முதலாசிரியனுந் தலைவனுமாய்க் கோடலானும், புத்திதத்துவத்தையே பொருளெனக்கொண்டு அதற்கு மேற் செல்லாமையானும் இந்நால்வரும் பௌத்தரெனப் பட்டாரென்க. இப்பௌத்தம் பெரும்பாலும் உலோகாயதமதம் போறலின் இஃது அதனை அடுத்துவைக்கப்பட்டது. பௌத்த சமய நூலாகிய மணிமேகலையுள்ளும் இஃது அங்ஙனம் உலோகாயத்தை அடுக்க வைக்கப்பட்டிருத்தல் பெரிதும் நினைவுகூரற்பாற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/229&oldid=1589461" இலிருந்து மீள்விக்கப்பட்டது