உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

❖ 25❖ மறைமலையம் – 25

தன் கீழ் நின்றதை நோக்கத் தான் பகுதியாயும், தனக்கு மேனின்றதை நோக்கத் தான் விகுதியாயுமிருக்க, இவை யிற்றுக்கு மேல் இருபத்துநான்காவதாய் நின்ற மூலப்பகுதி ஒன்றுமே என்றும் ஒரு பெற்றித்தாய் நிற்குமென்று உரைப்பர்.

.

னி னி இம் மூலப்பகுதிக்குமேல் இருபத்தைந்தாவது தத்துவமாய் நிற்பது புருட தத்துவம் என்பர். இவர் புருட தத்துவம் என்றது உயிர்க்கிழவனையேயாம். இப்புருடதத்து வந்தான் என்றுமுள்ளதாயும் தூய அறிவுப்பொருளாயும் கட்டுறாததாயும் இருப்பதென்றும், அங்ஙனமாயினும் அது மூலப்பகுதியின் சேர்க்கையால் இடையே கட்டற்று நிற்கு மென்றும், புருடனுக்கு வருந்துன்பம் பளிங்கைச் சார்ந்த மலர்களின் பலவகை நிறங்களும் அப்பளிங்கினுட் டோன்று மாறுபோல அவன் மூலப்பகுதியைச் சார்ந்து அதனைத் தன்னின் வேறாய்க் காணாது நிற்றலால் வருவதாமென்றும், அவன் தன்னை அம்மூலப்பகுதியின் வேறாய்க் கண்டுணரவே அத்துன்பம் நீங்குமாகலின் அத்துன்ப நீக்கமே வீடுபேறா மென்றும், உயிருடைய விலங்கினங்களைக் கொன்று வேட்கும் வேள்விகள் உயிர்கட்குத் துன்பத்தையே தருதலின் அவற்றை வேட்டல் தீவினையேயாமென்றும் இவ்வாற்றல் வேள்வி வேட்டலை மிக்கெடுத்துக் கூறும் வேதவுரைகள் வாலாமை யுடையவாய்த் துன்பத்தை மேன்மேல் விளைத்தலின் அவை கொள்ளற்பாலன அல்லவென்றும், உயிர்க்கொலை செய்யா மையே எல்லா அறங்களினும் மிக்கதாய்த் துன்ப நீக்கமாகிய வீடுபேற்றுதிப்பயனை அளிக்கும் என்றும் இல்பொருளாகிய அவிச்சையால் உயிர் கட்டற்று நிற்குமென்னும் மாயாவாதி கூற்று விஞ்ஞானவாதியாகிய சௌத்திராந்திகன் கூற்றாய் முடிதலின் அது வெறும் பொய்யோமென்றும், உலகு உள் பொருளேயாமன்றி இல்பொருளாதல் ஒருவாற்றானும் எய்தாதாமென்றும், வினைகள் தன்னாற் பிறராற் றெய்வத்தால் உயிர்களின் நுகர்ச்சிக்கு வருமென்றும், ஆயினும் அவ்வினைப் பயன்கள் நிலையுதல் உடையவல்லவென்றும், உயிர்களின் இன்பதுன்ப நுகர்ச்சிகளும் பிறப்பு இறப்புகளும் வேறுவேறா யிருப்பக்காண்டலின் அவை தம்மைத் தனித்தனியே உடைய உயிர்களும் ஒன்றல்லவாய்ப் பலவாமென்றும், இவ்வுயிர்களை வீடுபேற்றின்கண் உய்த்தற்பொருட்டே மூலப்பகுதியினின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/231&oldid=1589463" இலிருந்து மீள்விக்கப்பட்டது