உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

199

படைப்பு நிகழ்கின்றமையின் அவை அது பெற்றபின் படைப்பு இன்றாம் என்றும், படைப்பின்கட் காணப்படும் எண்ணிறத்ந வேறுபாடுகள் அத்துணையும் எண்ணிறந்த பழவினை வேறுபாட்டால் வந்தனவாமென்றும் அறிவுறுத்துப

ன்

இச்சாங்கியநூலார் கொள்கைகளுட் பெரும்பாலன சைவ சித்தாந்தத்திற்கு உடம்பாடாதல் காண்க. காரியங் கெட்ட வழி அது தன்காரணத்தில் நுண்வடியில் அமைந்து உளதா யிருக்கு மென இவர் கூறுஞ் சற்காரியவாதம் சைவ சித்தாந்தத்திற் பெரிதும் எடுத்தாளப்படுதலும் உணரற்பாற்கு. சாங்கியநூலும் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி காணப்படாமையின் அக்கோட் பாட்டினை ‘நிரீசுரசாங்கியம்' எனவும் ஓதுப. இவர் காண்டல் கருதல் உரை என்னும் மூன்று அளவைகள் கைக்கொள்வர்.

னி நையாயிகமதம் இன்னதென்பது காட்டுதும். அளவை, அளக்கப்படுபொருள், ஐயம், பயன், எடுத்துக்காட்டு, பெறப்பட்ட முடிபு, உறுப்பு,மறுப்பு, உறுதிப்பாடு, வழக்கு, அழி வழக்கு, இடக்கு, ஏதுப்பிழை, புரட்டு, விடைப்போலி, தோல்வியுரை என்னும் பதினாறுவகையான் மெய்யறிவு பெற்றவழி வீடுபேறு வாய்க்குமென நியாயநூலார் கூறுப. இவர் சாங்கிய நூலார் கூறும் காண்டல்கருதல் உரை என்னும் மூன்றனோடு உவமை ஒன்று சேர்த்து நான்களவைகள் கொள்வர்; இவ்வளவைகளான் அளக்கப்படு பொருள்களாவன. உயிரும் உடம்பும் ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் அறிவும் மனமும் முயற்சியும் வழுவும் மறுபிறப்பும் பயனும் துன்பமும் வீடும் எனப் பன்னிரண்டாம்; ஐயமாவது ஒரு பொருட்டன் மையை உள்ளவாறறியமாட்டாது இதுவே அதுவோ வென ஐயுறுதல்; பயனாவது ஒரு முயற்சியாற் பெறப்படுவது: எடுத்துக்காட்டாவது பொதுவாக எல்லாரானும் சிறப்பாக ஓர் அறிஞனாலும் அறியப்பட்டது; சித்தாந்தம் அல்லது பெறப் பட்ட முடிபாவது உண்மையெனத் துணிந்து நாட்டப்பட்டது; உறுப்பாவது ஒரு வழக்கினை ஆராய்ந்து உண்மைமுடிபு காட்டுதற்கு வேண்டப்படும் மேற்கோள் ஏது எடுத்துக்காட்டு மாட்டு முடிபு என்னும் ஐந்துமாம்; மறுப்பாவது ஒரு பொருளின் உண்மைத் தன்மை துணிதற்பொருட்டு அதற்கு மறுதலைப்பட்ட இயல்புகளையெல்லாம் ஆராய்ந்து காட்டுவதாம்; உறுதிப் பாடாவது இருபக்கத்தார் சொல்வனவுங் கேட்டு ஐயத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/232&oldid=1589465" இலிருந்து மீள்விக்கப்பட்டது