உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

  • மறைமலையம் - 25

இனி இவர் உயிரினியல்பைப் பற்றி உரைக்குமாறு: னி ஐம்பொறிகளுள் ஒரு பொறியே உயிராமென்றல் அடாது; என்னை? ஒரு பொருளை நாம் கண்ணாற்கண்டுணர்தலே யன்றிக் கையாற் றொட்டும் அறிகின்றோமாகலின். அதுபோக, உடம்பே உயிர் என்னாமோ வெனின் அதுவும் ஆகாது; என்னை? உடம்பு நீறாக்கப் பட்டவழித் தீவினையினின்றும் அது விடுபடக் காணாமையின்; அல்லதூஉம், முன்நேரத்தி லிருந்த வுடம்பு பின் நேரத்தில் இருப்பதின்றி அடுத்தடுத்து மாறிவரக் காண்ட லின் அஃது ஒரு நேரத்தில் ஓருயிரைக்கொன்றதாயின் அதனால் வருங்குற்றம் பின்நேரத்தில் உளதாகிய அவ்வுடம்புக்கு வராதொழிதல் வேண்டும்; மற்று அக்குற்றம் அதனைப் பற்றுதற்கு ஏதுவாய் நின்றது என்றும் உள்ள உயிரேயாதல் தெளியப்படுதலின் உடம்பின் வேறாய் உயிர் உளதெனலே பொருத்தமாம். உயிர் என்றும் உளதாயின் அஃது உடம்போடு கூடியிருக்கும் வழி அவ்வுடம்பை நெருப்பிலிட்டுக் கொளுத்தல் குற்றமாகாதெனின், அற்றன்று, ஓர் உயிரின் இயக்கத்திற்கு அதனுடம்பு ஒரு சிறந்த கருவியாயிருத்தலின் அதனைச் சிதைத்தல் குற்றமேயாம் என்பது. ஐம்பொறியுள் ஒன்றும், ஐம்பொறிக் கிருப்பிடமாகிய உடம்பும் உயிர் ஆகாவாயினும், ஐம்பொறியும் ஒருங்கு தொக்க தொகையே உயிரெனக் காள்ளாமோ வெனிற் கொள்ளாம்; என்னை? இடக்கண்ணாற் கண்டதொருபொருளை வலக்கண்ணானுங் கண்டு அதனை நினைவு கூர்வது ஒன்று வேறேயுள்தாகலின்.

அற்றன்று, கண் ஒன்றே நடுநின்ற மூக்கெலும்பால் இரண்டு போற்றோன்றுகின்ற தெனின், அது பொருந்தாது, ஒரு கண் சிதைந்து பழுதுபட்ட விடத்தும் மற்றொருகண் காண்டற் றொழிற்குப் பயன்படுதலின். அதுவேயுமன்றி கட்பொறியாற் புளியம் பழத்தைக் காண் கின்றுழி வாயின் கண் நீர் சுரக்கக் காண்டலின், ஒரு பொறியால் அறிந்தது கொண்டு ஏனையதன் கண்ணும் ஒரு கிளர்ச்சியினைத் தோற்றுவித்தற்கு அவ்விரண் டினும் வேறாய் நிற்பதோருயிர் இன்றியமையாது அவ்விரண்டினும் வேண்டப்படு மென்பது. அவ்வாறு ஒன்றன் நிகழ்ச்சிபற்றிப் பிறிதொன்றினும் ஒரு கிளர்ச்சி தோன்றல் நினைவின் செயலெனின், அந்நினைவு தானும் உயிரின் ஒரு தன்மை யாவதன்றிப் பிறிதன்றென மறுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/235&oldid=1589468" இலிருந்து மீள்விக்கப்பட்டது