உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

213

றோற்றுவிக்குங் காரணம் உள்வழித்தோன்றி, அல்லுழித் தோன்றாமை என்றும் உளதாய் நிற்றலே சொல்லின் இயற்கை என்பது பெறுதும்.

சால்

இனிச், சொற்கள் உண்டாக்கப் பட்ட வென்று உலகத்தார் வழங்குவதூஉம் அவைமுன் இல்லா திருக்கப் பின் படைக்கப்பட்ட ன வென்னும் பொருளைத் தராமல், தோற்றுவித்தற்குரிய முயற்சியால் அவை முன்னிருந்தே தோன்றின என்னும் பொருளைத் தருமென்று உணர்ந்து கொள்க. இனி ஒரே காலத்திற் பலராற் பலவிடங்களிற் கேட்கப்படுதல் கொண்டு ஒரு ஒன்றாதலும் என்றுமுளதாதலும் ஆகாவெனக் கூறுதலும் அடாது.என்னை? ஞாயிறு ஒன்றே ஒரே காலத்து ஓரிடத்தன்றிப் பலவிடத்தும் பலராலுங் காணப்படுதல் கொண்டு க பலவா மென்றல் பொருந்தாமைபோலச், சொல்லும் அங்ஙனங் கேட்கப்படுதல் பற்றிப் பலவாம் என்றல் பொருந்தாது; ஞாயிறு அங்ஙனங் காணப்படினும் ஒன்றாய் என்றுமுளதாய் நிலைபெறுதல் எல்லார்க்குந் துணிபொருளாய் இருத்தல் போலச் சொல்லும் ஒன்றாய் நிலைபேறுடைய பொருளேயா மென்பது தேற்ற மாகலின் என்க.

இனி, 'அஃறினை' என்னும் புணர்ச்சியில் ‘அல் திணை' என்னுஞ் சொற்களே அவ்வாறு திரிந்தன வென்றலும் அமையாது, ‘அல் திணை' என நின்றவழி நின்ற எழுத்துக்களும் வேறே; ‘அஃறிணை' என நின்றவழி இடையே நின்ற எழுத்துக் களும் வேறே; பனிக்கட்டி தண்ணீரின் திரிபாற்றோன்றிய தொன்றாகலின் அஃது அத்தண்ணீரின் வேறா மாறில்லை. அதுபோல் ஆய்தமும் றகரமும் லகர தகரங்களின் திரிபேயாயின் அவ்வெழுத்துக்களும் லகர தகரங்களின் வேறு அல்லவாதல் வேண்டும். மற்று அவை அவ்வெழுத்துக்களின் வேறென்பதே இலக்கண நூலார் கருத்தாகலிற் சொற்கள் திரிபெய்து மென்றல் இசையாது. இனிப் பலராற் சொல்லப்படுதலிற் சொற்கள் தம் ஓசையளவிற் பெருகுமென்பதும் உண்மையன்றாம். என்னை? இவற்றைக் கூறுவோர் குரலின்கண் அவ்வேறுபாடு காணப் படுகின்றதேயல்லாமல், ஒரு சொற்றானே தன்னளவிற் பெருகு தலுஞ் சுருங்குதலுஞ் காணப்படாமையினாலும் கூறுவோர் தொகை மிகுதிப்பட்டால் ஓசை ஓங்குதலும் அது குறைந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/246&oldid=1589480" இலிருந்து மீள்விக்கப்பட்டது