உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

ஏனையதுங்

❖ 25* மறைமலையம் – 25

குறைதலுங்

குறைதலுங் கண்கூடாய் கண்கூடாய் எவருங் காணக் கிடத்தலானு மென்பது. மேலும், நையாயிகர் கருத்துப்படி நோக்கினும் ஒருசொற் றன்னளவில் வேறுபாடுறுதல் செல்லா தென்பது புலனாம். சொல்லாவது ஓசையின் வடிவேயன்றிப் பிறிதில்லை. இனி ஓசை யொரு பண்பென்றே அவருங் கூறுபவாகலின், அவ்வோசையாகிய பண்புக்கு அளவு என்னும் வேறுமொரு பண்புகோடல் அவர் கொள்கைக்கே முரணாய் முடியுமென் றோர்க.

என்று, சொற்கள் நிலைபேறுடையவல்லவென நையா யிகர் கூறுங் கூற்றுக்களையெல்லாம் முறையே தந்து மறுத்தபின் மீமாஞ்சகர்: சொற்கள் நிலைபேறுடையவல்ல வென்னும் பிழைபாட்டுணர்ச்சி. அவை நாங் கூறுமாற்றான் மட்டுமே உளவாகின்றன என்னும் வழூஉநினைவால் வலுருவதொன்றாம் மற்று உண்மையான் நோக்குவழிச், சொற்களை நாங்கூறுவது அவற்றைப் படைத்தற் பொருட்டாக வன்றி அச் சொற் பொருளைத் தெரிவித்தற்பொருட்டாகவேயாம். சொல் நிலை அச்சொற் றோன்றி மறைந்த பிற்பொழுதில் அதனைக்கேட்டோர் உள்ளத்து நிகழும் பொருளுணர்ச்சியினை அது பயக்குமாறு யாங்ஙனம்? பின் சொற் பொருளுணர்ச்சி நடைபெறுமாற்றினை நுணுகி நோக்கவல்லார்க்கு, அதனைப் பயக்குஞ் சொல் என்றும் உளதாவதேயாம் என்பமு நன்கு புலனாம்.

பேறுடைத்தன்றாயின்

மேலும், எல்லாச் சொற்களும் எல்லாரானும் பண்டு தொட்டே ஒரு பெற்றியவாய் உணரப்பட்டு வருகின்றன; முன்னர்ப் பலகாற் கேட்ட ‘ஆ' என்னுஞ் சொல்லைப் பின்னருங் கேட்குங்கால், அது முற்கேட்ட சொல்லின் வேறெனக் கருதப்படாது ஒன்றென்றே எல்லா ரானுங் கருதப்பட்டு வருதலால், இப்பரவை வழக்கானும் சொல் என்றுமுள பொருளாதல் துணியப்படும். மேலும், ஒரு சொல்லை மறித்தும் மறித்தும் பலகாற் கூறியவிடத்து, 'இச்சொல் ஐந்து அல்லது பத்து அல்லது பன்னிரண்டு முறை சொல்லப்பட்டது’ என எவரும் உரைக்கக் காண்பதல்லால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சொற்றோன்றி யழிந்து வெவ்வேறு ஐந்து சொற்கள் அல்லது பத்துச் சொற்கள் அல்லது பன்னிரண்டு சொற்கள் தோன்றின வென்று உரைப்பாரைக் காண்கின்றிலேம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/247&oldid=1589481" இலிருந்து மீள்விக்கப்பட்டது