உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

215

அதனாரும், ‘திரிபில்லாததும் என்றும் உளதாவதுமாகிய சொல் லால்' என்னுஞ் சொற்றொடர் வேதத்துட் காணப்படுத லானும் சொல் என்றுமுள்ள நிலையியற்பொருளா மென்றே முடிப்ப.

னிச், சொற்கள் நிலைபேறுடையன வென்று நாட்டிய பின், அச்சொற்கள் ஒருங்கியைந்த தொடர் மொழிகளையுடைய வேதங்களும் என்று நிலைபேறாயுள்ளன வென்று நாட்டுதலே மீமாஞ்சகர் கோட்பாடாம். என்னை? ஒரு தொடர்மொழிப் பொருள் அதன்கண் உள்ள சொற்களின் பொருளையே சார்ந்திருத்தலானும், அங்ஙனம் ஒரு தொடர்மொழிக்கண் ஒன்றனை யொன்று அடுக்க நின்று பொருடருஞ் சொற்க ளெல்லாம் எஞ்ஞான்றும் உள்ளன வென்பது மேலே பெறப் பட்டமையானும், இவையிற்றின் நிலைபேறுடைமை பெறப் படவே, இவற்றால் ஆக்கப்பட்ட தொடர்மொழிகளால் ஆக்கப் பட்ட வேதங்களும என்றும் நிலைபேறாயுள்ளன வென்பது தானே போதரலானு மென்பது.

அற்றேல், வேதப்பகுதிகள் பலவும் ‘கடன்' ‘பிப்பலாதன்' முதலான மக்களால் இயற்றப் பட்டன வென்பதற்கு அவை அவர் பெயர் தாங்கி நிற்றலே சான்றாகாலானும், வேதங்களின் இடையிடையே ‘உளத்தாலகி விரும்பினான்' பபர பிரவாகநி விரும்பினான் என்பவை போன்ற மக்கள் பெயர் காணப் படுதலின் அப்பகுதிகள், அம்மக்கட்குப் பன்னெடுங் காலம் பின்னே இயற்றப்பட்டன வென்பது தெளியப்படுதலானும் வேதங்கள் முக்காலத்தும் உள்ளன வென்பது யாங்ஙன மென வினாவுவார்க்கு மீமாஞ்சகர் இறுக்குமாறு; வேதத்தின் சிற்சில பகுதிகள் கடன் பிப்பலாதன் முதலியோரால் நன்கு பயிலப்பட்டு அவராற் பெரிதும் பாராட்டப்பட்டு வந்தமைபற்றி அவர் பெயர் தாங்கி நின்றனவே யல்லாமல், அவரால் இயற்றப்பட்டமை பற்றியன்று.இனி, மக்கட்கும் ஏனைப் பொருள்கட்கும் பெயர்கள் போல் ஆங்காங்கு அவ்வேதத்தின்கட் காணப்படுஞ் சொற்கள் உண்மையில் அம்மக்களையும் ஏனைப்பொருள்களையும் குறிப்பனவல்ல; வேதத்திற் காணப்பட்ட அச்சொற்களையே பின்வந்தோரான மக்களும் ஏனைப் பல்பொருள்களும் தமக்கும் பெயராய்க் கொண்டனர். அச்சொல் ஒப்புமைபற்றி அவை மக்கள் முதலான நிலையில்லாப் பொருட்பெயர்கள் போற் காணப்படுகின்றன வென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/248&oldid=1589482" இலிருந்து மீள்விக்கப்பட்டது