உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

❖ 25* மறைமலையம் – 25

அற்றாயினும்; ‘ஆக்கள் வேள்விக்கண் அமர்ந்தன,' ‘மரங்கள் வேள்வி ஆற்றின' என்றற்றொடக்கத்துப் பொருந்தாத் தொடர் மொழிகள் வேதத்திற் காணப்படுதல் என்னையெனின்; அத்தொடர் மொழிகளைமட்டுந் தனியே யெடுத்து நோக்கு வார்க்கு அவை பொருந்தாதன போற் றோன்றுமாயினும், அவை யிருக்குமிடத்தின் முன் பின் ஆராய்வார்க்கு அவை அங்ஙனம் ஆகாமை புலப்படும். இன்னோனைன தொடர்மொழிகள் ஒரு வேள்வியினைக் குறித்துப்பேசும் பகுதிக்கட் காணப்படுவனவாம். அவ்வேள்வியினை ஆண்டுப் புகழ்ந்து பேசுதல் கருத்தாகலின் ஓர் அறிவுடைய மரங்களும் அவ்வேள்வியை ஆற்றின என்று அதன் சிறப்பு ஓரறிவுயிர்கள் முதலானவற்றின்மேல் வைத்துப் புனைந்துரைக்கப்பட்டது; இது கேட்ட வளவானே ஆறறிவு டைய மக்கள் அதன் மாட்சி கடைப்பிடித்து அதனை ஆற்றுவராகலின் என்பது. இவ்வாறு வேதங்கள் ஒருவரால் ஆக்கப்படாது தாமே நிலையாய் என்றுமுளவாயிருத்தலால், அவற்றின்கண் முன் பின் முரணாம் பொருள்கள் வருதற்கு இட மின்று. அதனால் வேதங்கள் மட்டுமே நல்வினை அன்னதென்றுணர்தற்கு உண்மைப் பிரமாணமாமென்பர்.

இனி, இன்னது செய்கவென ஏவுதற் பொருட்கண் வரும் சொற்றொடர்களும், இன்னது செய்யற்க வென விலக்குதற் பொருட்கண்வரும் சொற்றொடர்களும் வேதங்களுள் முதன்மைப் பிரமாணங்களாம் என்பர். இவ் ஏவுதல் விலக்குதல் என்னும் பொருண்மேலன்றிப், புகழ்ந்துரை இகழ்ந்துரைப் பொருண்மேல் வருவனவும், மந்திரங்களாய் நிற்பனவும், பெயர் குறிப்பனவும் எல்லாம் அவை போல் முதன்மைப் பிரமாணங்கள் அல்ல வாயினும், ஏவுதல் விலக்குதற் பொருண் மேல் வருஞ் சொற்றொடர்ப் பொருட் சிறப்பு உணர்தற்கு உதவியாய் நிற்றலால் அவையும் அம்முகத்தால் அவற்றிற்கு அடுத்த நிலையிற் பிரமாணமாய்க் கொள்ளற் பாலனவா மென்பர்.

‘நலம்பெற வேண்டினோன் வாயுதேவற் குகந்த வெள்ளிய விலங்கை வேட்க' என்னுந் தொடர்மொழி இன்னது செய்க வன வியங்கோட் பொருண்மேல் வருதலின் அது சிறந்த பிரமாணமாம். 'வாயு மிகவிரைந்த செலவினை யுடைய தேவனாம் என்னும் புகழ்ந்துரைச் சொற்றொடரும், “உருத்திரன் அழுதான். அதிலிருந்து வெள்ளி உண்டாயிற்று"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/249&oldid=1589483" இலிருந்து மீள்விக்கப்பட்டது