உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

217

என்னும் இகழ்ந்துரைச் சொற்றொடரும் இன்னது செய்த வென ஏவாமையின் முதன்மைப் பிரமாணங்கள் அல்லவாயினும், மேற்கிளந்த ஏவற்றொடர் மொழிப் பொருளைச் சிறப்பித்தற்குப் பயன்படுதலின், அவையும் அதுபற்றி அடுத்த பிரமாணங் களாய்க் கொள்ளப்படும். யாங்ஙனமெனின், வெள்ளிய விலங்கை வாயுதேவற்கு வேட்க வேண்டுமென்ப தென்னை யென்று வினாயினார்க்கு, வாயு மிக விரைந்த நடையினை யுடைமையால் வேட்போனை அவன் மிகு விரைவில் நலம்பெறச் செய்வான் என்னும் பொருளியைபு காட்டி அப்புகழ்ந்துரைப் பொருள் வியங்கோன் மொழிப் பொருளுக்கு உதவியாய் நின்று இறைபயக்குமாகலின் என்க.

ன்னும் இருக்கு முதலாகிய நான்மறைகளும் மக்களா லாயினும், கடவுளாலாயினும் ஆக்கப்படாமல் என்றும் நிலை அவற்றின்கண் ஏவப்பட்ட

பேறாயுள்ளனவாமகலின்

வேள்விகளை முறைப்படி ஆற்றுதலே நல்வினையாமென்றும், அவற்றை அங்ஙனஞ் செய்யாதொழித்தலே தீவினையா மென்றும், பலதிறப்பட்ட வேள்விகளை வேட்டலொன்றானே மக்கள் தாம் வேண்டிற்றெல்லாம் பெறுவரென்றும். மறைகளும் போதரும் மந்திரங்கள் எல்லாம் பொருளுடையனவேயா மென்றும், மிருதிகளும் ஆறங்கங்களும் எல்லாம் மறைமொழிப் பொருளோடு முரணாவழியே பிரமாணமாகுமல்லால் அவற் றொடு முரணுங்கால் அவை பிரமாணமாகக் கொள்ளப்படா வென்றும் உரைப்பர்.

இன்னும், வேள்வி வேட்டல் ஒவ்வொரு பயனைப்பெறற் பொருட்டேயாம் என நிறுவப்பட்டிருத்தலால், வேள்வி யாற்றுதற்கும் அது பயப்பிக்கும் துறக்கம் தூலிய பயனைப் பெறுதற்கும் இடையே நெடுங்காலஞ் செல்லாநிற்பவும் செய்த அச்செயலின் பயனைத் தப்பாமல் தருதற்கு இடையே ஒரு கருவி இன்றியமையாது வேண்டப்படுமன்றே; அக்கருவிதான் யாதோவெனின், அது ‘அபூருவம்' எனப்படுவதாம் என்பர். எனவே, ஒருவன் செய்த நல்வினையின் பயனை இடைநின்று கூட்டுவதே ‘அபூருவம்' என்று அறியற்பாற்று. மகளிர் தங் கொழுநர் அல்லாதாரையும் மருவிப் பிழைத்துப் பெறும் பிள்ளைகளும் உளராதலால் 'இவர் பார்ப்பனர்' 'இவர் பார்ப்பனர் அல்லாதவர்” என்று பகுத்துணர்தல் ஏலாதாயினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/250&oldid=1589485" இலிருந்து மீள்விக்கப்பட்டது