உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் - 25

புகழ்பெற்ற தம் முன்னோர் பெயர்களை எடுத்துக் கூறவே அவர்க்குப் பார்ப்பனத் தன்மை யுண்டாமென மீமாஞ்சை நூல் முதல் அத்தியாயத்து முதற் பாதத்து ஆறாம் அதிகரணத்தின் கண் உள்ள ஏழாஞ் சூத்திரம் புகலாநிற்கின்றது. இம்மீமாஞ்சை

நூலுட் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு சிறிதுங் காணப்பட ாமை யானும், அவரவர் சய்த வேள்வி வினையினின்றும் ‘அபூருவம்' என்பதோர் ஆற்றல் தோன்றி அதுவே அவர்க்குத் துறக்கம் முதலிய அவ்வேள்விப் பயனைத் தருமென்பதே அதன்கண் வற்புறுத்துரைக்கப் படுதலானும் மீமாஞ்சர்க்கு முழுமுதற் கடவுள் ஒன்றுண்டென்பது உடன் பாடன்றுபோலும் என்க. இவ்வளவின் மீமாஞ்சகர் மதம்

முடிந்தது.

இனிச் சைவமதம் என்பது நிலம், நீர், தீ, வளி, வெளி, ஞாயிறு. திங்கள், உயிர் என்னும் எண்வகைப் பொருளொடும் புணர்ந்து, படைப்புக் காப்பு அழிப்பு மறைப்பு அருள் என்னும் ஐந்தொழில்களையும் தனக் தனக்கொரு விளையாடல்போற் கொண்டு நடாத்தி, உயிர்களின் துன்பங்களைப் போக்கித் தன்னிற் பிறிதாவது ஒன்று இல்லானாய் விளங்கும் சிவபெரு மானை முழுமுதற்கடவுளாக வழிபடுவது என மணிமேகலையுட் கூறப்பட்டது. மணிமேகலையுட் சொல்லப்பட்ட சைவசமயமே திருவாதவூரடிகளாற் றழுவப்பட்டதூஉமா மென்பதனை இவ்வுரையுள் ஆண்டாண்டு விளக்குமாறுகொண்டு உணர்ந்து கொள்க.

இனிப் பிரமவாதிமதமாவது உலகமெல்லாம் இறை வனால் இடப்பட்ட ஒரு முட்டையென்றுரைப்பதாம். இவ்வாறு மணிமேகலையுட் சொல்லப்பட்டது; இது மனு வினும் சதபத பிராமணத்தினுங் காணப்படும்.

இனி வைணவமதமாவது எப்பொருட்கும் முதல்வரான திருமால் தமது விருப்பத்தாலேயே உருவுகொண்டு திருப்பாற் கடற்கண்ணே அறிதுயிலிற் கிடந்தருளுவ ரெனவும், ஐந்து இரவுகளிலே அவர் வைணவ சமயத்திற் குரிய ஆகம நூல்களை அருளிச் செய்தமையால் வைணவம் பாஞ்சராத்திரமென்றும் பெயர்பெறு மெனவும், அவர் தமது கொப்பூழினின்று நான் முகனைத் தோற்றுவித்து அவனாற் படைப்புத் தொழிலையும் அந் நான்முகன் முகத்தினின்று உருத்திரனைத் தோற்றுவித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/251&oldid=1589486" இலிருந்து மீள்விக்கப்பட்டது