உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

219

அவனால் அழித்தற்றொழிலையும் நடைபெறச்செய்தது தாம் என்றுங் காத்தற் றொழிலையே நிகழ்த்துவரெனவும், உலகின்கட் டீயோரை ஒறுத்து நல்லோரைக் காத்தற் பொருட்டு மீன் யாமை கேழல் நரசிங்கம் குறள் பரசுராமன் இராமன் பலராமன் மாயன் கல்கி முதலிய பத்துத் திருவவதாரங்களை எடுத்தருளியும் இனியெடுத்தும் வருவரெனவும், அவர் மூலப்பகுதியாகிய மாயையாகியும் எல்லாவுயிர்களுமாகியும் அவ்வுயிர்களைத் தொடக்கும் மாயா காரியங்களாகியும் நிற்பராதலால் மாயை யாற் கட்டுறுத்தும் அவராலன்றி மாயையின் றொடர்பை அறுத்தல் ஏலாதெனவும், அவரை ஓவாது வழிபடுவார்க்கு மாயையின் றொடர்பை யறுத்துத் தமது வைகுண் வாழ்க்கையில் அவரை வைப்பரெனவும் உரைப்பதாம்.

னி வேதவாதிமதமாவது துவக்கமும் ஈறும் இல்லாத தாய் ஒருவராலும் ஆக்கப்படாததாய் என்றும் உளதாவது வேதமெனவும், வேதங்களுட் கூறப்படும் வினைகளைக் கைக் கொண்டு நடத்தும் முறைமையினை அறிவுறுத்தும் போதாய னீயம் முதலிய கற்பமும், வேதங்களும் போந்த காயத்திரி முதலான சந்தங்களின் பெயரும் அவ்வவற்றிற்கு எழுத்து இத்துணையவென்றலும் உணர்த்தும் சந்தோவிசியும், வேத வினைகள் செய்தற் கிசைந்த கால வகைகளை வரையறுத் துரைக்கும் சோதிடமும், வேதங்களின் சொற்பொருள் அறிவிக்கும் நிருத்தமும், வேதங்களை எடுத்தல் படுத்தல் நலிதல் முதலிய ஒலி வேறுபாட்டாற் சொல்லுமாறு காட்டும் சிக்கையும், வேதங்களின் எழுத்துச் சொற் பொருளியல்பு அறிவிக்கும் வியாகரணமும் என்னும் இவ் ஆறும் அவ்வேதத்திற்கு முறையே கை கால் கண் செவி மூக்கு முகம் என்னும் ஆறு உறுப்புக்களா மாகலின், அவை 'அங்கம்' எனப் பெயர்பெறு மெனவுங் கூறுவதாம்.

இனிச் சமணமதமாவது ஆசீவகவாதம் எனவும் நிகண்ட வாதமெனவும் இரு பாகுபாட்டினை யுடைத்து. இ இவருள் ஆசீவகவாதங் கூறுவோர் கோட்பாடுகள் வருமாறு: எல்லை யில்லாத எல்லாப் பொருள்களிலும் எங்கும் எப்பொழுதும் நீங்காமல் நின்று புலப்பட்டு அருள்புரிகின்ற வரம்பில்லாத அறிவினையுடைய மற்கலி தேவனே இவர் தமக்கு இறைவனாம். வ்விறைவன் அருளிச்செய்த முதல் நூலிற் சொல்லப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/252&oldid=1589487" இலிருந்து மீள்விக்கப்பட்டது