உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் - 25

ன்

பொருள்கள் ஐந்து. அவை: உயிரும், நில அணு நீர் அணு தீ அணு காற்றணு என்பனவாம் ஆம். இவைதம்முள் நில அணு வல்லென்றிருப்பது; நீரணுத் தண்ணென்று சுவையினை யுடையது; தீயணுச் சுடுதலும் மேற் சேர்தலும் உடையது; காற்றணுக் குறுக்கிட்டு அசைத்தலைச் செய்வது. உயிர் இவைதம்மை யெல்லாம் அறிவு மியல்புடையது. நிலவணு முதலிய நான்கும் உணர்வுடைய அல்ல; அவை ஒன்று கெட்டு மற்றொன்றாதலும், புதியவாய்ப் பிறத்தலும், ஒன்று மற்றொன் றிற் புகுந்திருத்தலும் ஒரு காலத்தும் இல்லை; ஓரணு இரண் டாய்ப் பிளவுபடுதலும் இல்லை; அவலைப் போற் பரப்பனவும் அல்ல; ஆயினும் உலவுதலும், தாழ்தலும், உயர்தலும், மலை முதலிய பேருருக்கள் உண்டாம்படி தாம் ஒருங்குகூடுதலும், பின்னர் அவ்வுருக்கள் இல்லையாம்படி பிரிந்து தந்தன்மை யவாதலும், நிலை பெற்ற வைரக்கல் ஆம்படி அத்துணை வன்மையாகச் செறிதலும், நடுவே புரையுடைய மூங்கிலாகக் கூடுதலும் இவ்வணுக்கள் வல்லனவாம். நிலன் முதலாகக் கூறிய வ்வணுக்கள் நான்கும் என்றும் ஒன்று கூடியே நிலன் முதலாகிய பொருள்களைத் தோற்றுவிக்குமல்லாமல், இவற்றுள் இரண்டேனும் அன்றி மூன்றேனும் ஒன்றுகூடி நிற்க ஏனைய அவற்றை வேறு பிரிந்து நிற்பனவல்ல; இங்ஙனம் அவை ஒருங்குகூடி நிற்றலால் நிலத்தின்கட் சுவை ஒளி ஊறு என்னும் மூன்று தன்மைகளும், தீயின்கண் ஒளி ஊறு என்னும் இரண்டு தன்மைகளும், காற்றின்கண் ஊறு என்னும் ஒரு தன்மையுங் காணப்படாநிற்கும்.படைத்தல் காத்தல் அழித்தல் வீட்டின்கட் சேர்த்த லென்னுந் தொழில்கள் நான்கும் பிறரொருவராற் செய்யப்படாமல் இவ்வணுக்களாலேயே நடைபெறுவனவாம். இவ்வணுக்கள் ஒன்றுகூடி விரிதலே படைப்பு; அவ்வாறு விரிந்தவை நீள நிற்றலே காப்பு; அவை மீளக்குறுகுதலே அழிப்பு; அவை ஊன்றி நிற்றலே வீடுபேறு என அறியற்பாற்று.

இனி, ஓர் அணுவாகிய உயிரை நாற்பொருட்டிரட்சியில் நிற்கும் மக்கள் காணவல்லுநரல்லர்; என்றாலும், விண்ணின்கட் பொன்னெயில் வட்டத்து எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளே அதனைக் காணமாட்டுவான். இவ்வுயிர்கள் தத்தம் வினை களுக்கு ஈடாகப் பல வேறுருக்கள் எடுத்துத் தோன்றியபின் எல்லாரானுங் காணப்படாநிற்பர். இவரெடுக்கும் பிறப்புக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/253&oldid=1589488" இலிருந்து மீள்விக்கப்பட்டது