உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

221

தாம் கருமை கருநீலம் பசுமை செம்மை பொன்மை வெண்மை என்னும் ஆறு நிறங்களோடு கூடியிருப்பனவாம். இவற்றுள், மிக்க வெண்மை நிறத்தோடுங் கூடிய பிறவியில் வந்தவர்களே வீடு பேற்றின்பத்தினை அடைவர்; ஏனைக் கருமை முதலிய நிறங்கள் வாய்ந்த பிறவி யெடுத்தவர்கள் கட்டுற்றுப் பிறழ்ந்துழ லுவர். ஈண்டுக் காட்டிய பிறவிகளுட் கருநிறப்பிறவியினும் கருநீலப் பிறவி உயர்ந்ததெனவும், பசும்பிறவியினும் செந்நிறப் பிறவி உயர்ந்ததெனவும், செம்பிறவியினும் பொன்னிறப்பிறவி உயர்ந்ததெனவும், பொற் பிறவியினும் மிக்க வெண்பிறவி உயர்ந்ததெனவுங் கூறாநிற்பர். இன்னும் பேறு, இழவு, இடை யூறு, இன்பம், பிரிவிலாதிருத்தல், பிற நாட்டிற் சேர்தல், மூப்புச், சாக்காடு என்னும் எட்டும் முற்பிறவியிற் செய்த வினையால் அவரவர்க்குக் கருவிலேயே வந்து பொருந்துமென்றும், எல்லாம் ஊழ்வினையிற் பட்டு நடத்தலே இவ்வுலகத்தின் இயல்பா மென்றும், மேல் அணுக்கள் ஐந்தெனப்பட்டவற்றோடு நல் வினை தீவினை யென்னும் இரண்டையும் உடன் கூட்ட இவ்வுலகம் ஏழணுக்களா யிருக்குமென்றும் சமணரில் ஆசீவகவாதிகள் புகலாநிற்பர்.

.

L

இனிச் சமணரில் நிகண்டவாதிகள் கூறுவன வருமாறு: எட்டுத் தீயதன்மைகளை விட்டு எட்டு நல்ல தன்மைகளோடு கூடி இந்திரர்களாற் றொழப்படும் அருகக்கடவுளே இவர் தமக்கு இறைவனாம் என்பர். எட்டு நல்ல தன்மைகளாவன; கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா ஆண்மை, கடையிலா இன்பம், பெயரில்லாமை, குடியில்லாமை, வாழ் நாளின்மை, அழியா இயல்பு என்பனவாகும்; இவற்றுக்கு மறுதலைப்பட்ட எட்டும் எட்டுத் தீயதன்மைகளாகும். இன்னும் இவர்தம் கடவுள் முக்காலத்து நிகழும் நிகழ்ச்சிகளையும் ஓரிமைப் பொழுதிலே அறியுந் தவஆற்றல் வாய்தவனென்றும் தன்னை வழிபட்டார்க்கும் வழிபடாது மாறுபட்டார்க்கும் ஓர் நீர்மையனாய் நிற்கும் ஒத்த வுள்ளத்தினையுடையனென்றும்,பசி நீர்வேட்கை அச்சம் செற்றம் உவகை மயக்கம் நினைவு பழித்தல் நோய் சாதல் வியர்பு கவலை செருக்கு வியப்பு உணவு பிறப்பு உறக்கம் என்னுங் குற்றங்களினின்றும் அகன்று மேலுலகத்தின் கட் பொன்னெயில் வட்டத் தெழுந்தருளியிருப்பனென்றும், அவன் அருளிச்செய்த நூல்கள் ‘அங்காகமம்' 'பூருவாகமம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/254&oldid=1589489" இலிருந்து மீள்விக்கப்பட்டது