உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் - 25

செகுசுருதியாகமம்' என மூன்றாமென்றும், இந்நூலின்கட் சொல்லப்படும் காலம் உயிர் தன்மாத்திகாயம் அதன்மாத்தி காயம் நல்வினை தீவினை விண் பரமாணு கட்டு வீடு என்றும் பத்தும் ஒருவராற் படைக்கப்படாமல் தொன்று தொட்டே உள்ளவாமென்றும் உரைப்பர்.

இவர் கூறும் இப்பத்தினுட் காலமாவது ஒரு பொருள் ஒரு நொடிப்பொழுதில் தோற்றம் நிலை இறுதி என்னும் மூவகை நிலையினையும் அடையுமாறு செய்யவல்லது; உயிராவது வாழ்நாள் எல்லையைப் பொருந்தி, ஓர் உடம்பினை மேவிக், கரும்பின் சாறு அக்கரும்பெங்கும் நிறைந்து நின்றாற்போல அவ்வுடம்பெங்கும் நிறைந்து நின்று, குழவி பிள்ளை இளமை முதுமை முதலான வேறு பல பருவங்களுடையதாய், ஓரறிவு முதல் ஆறறிவுகள் பெற்றுக், கட்டு வீடு என்னும் இருவகை நிலைகளினும் எக்காலத்தும் உளதாவது; தன்மாத்திகாயமாவது எங்குமுள்ளதாய்க் கீழ் நிலையில் நிற்கும் பொருள்களை நிலைபெறாமற் செய்து உயிர்களுக்கும் புற்கலத்திற்கும் மேலாகச் சல்லப்பண்ணும்; அதன் மாத்திகாயமாவது அங்ஙனமே எங்குமுள்ளதாய் உயிர்கட்கும் புற்கலத்திற்குங் கீழுள்ள பொருள்கள் நிலைபெற்று நிற்குமாறு செய்யும்; நல்வினை யாவது நலத்தைப் பயப்பது; தீவினையாவது துன்பத்தைத் தருவது; விண்ணென்பது எல்லாப் பொருள்கட்கும் இடந்தந்து நிற்பது; புற்கலமென்பது அணு புற்கலம் கந்தபுற்கலம் என்னும் இருவகைப் பாகுபாடு உடைய தாய், அணுபுற்கலம் வலிமையும் நெகிழ்ச்சியும் உடைத்தாய் மூன்றுலகங்களினும் நிறைந்திருக்கக், கந்தபுற்கலமானது இரும்பு கல் மரம் முதலான பருப்பொருள் வடிவாய்த் திரிபுற்று நிற்கும்; கட்டாவது உழவு, தொழில், வரைவு, வாணிகம், கல்வி, கொற்றொழில் என்னும் அறுவகை னைகளாற் கட்டுப்பட்டு இயங்குவது: வீடாவது இவ்வறுவகைக் கட்டும் நீங்கிநிற்பது. இவ்வளவிற் சமணரில் நிகண்டவாதிமதம் முடிந்தது. இவ்வாறு இருகூற்றிற்பட்ட அறுவகைச் சமயங்களும் அறியற்பாற்று.

திருவாதவூரடிகள் காலத்திற்கும் முற்பட்ட மணிமேகலைச் செந்தமிழ்க் காப்பியத்துட் சொல்லப்பட்டமையின் மேற்கூறிய அறுவகைச் சமயங்களுமே அடிகள் காலத்தும், அடிகட்கு முற்பட்ட காலத்தும் வழங்கின வென்பது நன்கு பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/255&oldid=1589490" இலிருந்து மீள்விக்கப்பட்டது