உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

223

பதஞ்சலிமுனிவர் இயற்றிய யோகமும், வியாசமுனிவரியற்றிய வேதாந்தமும் மணிமேகலையுட் காணப்படாமையின், அவை யிரண்டும் மணிமேகலை காலத்திற்குப் பிற்பட்டு எழுந்தனவா மென்பதூஉம் இதுகொண்டு முடிக்கப்படும்.

ச்

இனி, மாயாவாதம் என்பது மணிமேகலை, திவாகரம், பிங்கலந்தை என்னும் பழைய நூல்களிற் காணப்படாமற் சூடாமணி நிகண்டின்கண் மட்டுங் காணப்படுதலின், அஃது அந்நிகண்டு எழுதப்படுதற்குச் சிறிது முன்னே தோன்றி நடைபெறலாயிற் றென்பதூஉம் அறிதல் வேண்டும். எனவே, அடிகள் “மிண்டிய மாயாவாதம்” என இத்திருவாசகத்தின்கட் கூறியது பிற்காலத்திற் கௌடபாதர், சங்கரர் முதலானோராற் காட்டி விடப்பட்ட மாயாவாதம் அன்றென்பதூஉம், கௌ பாதர் சங்கரர் மயாயாவாதக் கொள்கையோடு பெரிதொத்து அதற்கும் முற்பட்ட காலத்தேயிருந்து யோகாசார சௌத்தி ராந்திக பௌத்தமதமே ‘மிண்டிய மாயாவாதம்' என அங்ஙனம் அடிகளாலெடுத்துரைக்கப்பட்ட தென்பதூஉம், பின்றைநாள் மாயாவாதம் பௌத்தமதக் கொள்கையோடு பெரும்பான்மை யும் ஒத்தல் பற்றியே அது ‘பிரசந்த பௌத்தம்' எனப் பெயர் பெறலாயிற்றென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்க. வடமொழி யிற் சிவராமன் என்பார் வரைந்த சொற்பொருள் வரிசையிலும் ‘மாயாவாதம்' எனுஞ் சொற்றொடர் பௌத்தசமயக் கொள்கை யினைத் தெரிப்பதெனக் குறிக்கப்பட்டிருத்தலுங் கண்டுகொள்க.

இனி, 'அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும், வீடுபேறாய் நின்ற விண்ணோர்பகுதி, கீடம்புரையுங் கிழவோன்' என்றது மேலெடுத்துக்காட்டிய இருகூற்று அறுவகைச் சமயப் பகுப்புகளில் நிற்பார் தத்தமக்கு ஏற்ற பெற்றி அடையும் தத்துவங்களில் அவர்க்கு அருள் செய்யும் முதல்வர்களாயுள்ள தேவர்களெல்லாரும், எல்லாத் தத்துவங்கட்கும் மேற்பட்டு அவற்றை யெல்லாந் தன்னுள் அடக்கிநிற்கும் ஒப்பற்ற முழுமுதற் கடவுளின் அளவிலாற்றற்குமுன் மிகச் சிறிய இயக்க முடைய புழுப்போல்வரென அவரது சிறுமையினையும் எல்லாம்வல்ல முதல்வனது பெருமையினையும் விளக்கிய வாறாம்.

ஓர்

‘பகுதி’ பகுப்பென்னும் பொருட்டாதல் "பகுதியாற் பாற்பட்டொழுகப்பெறின்" என்புழிக் காண்க.*(திருக்குறள் 121)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/256&oldid=1589491" இலிருந்து மீள்விக்கப்பட்டது