உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

❖ - 25❖ மறைமலையம் – 25

‘கீடம்' புழுவெனப் பொருள்படும் ஒரு வடசொல்.

'கிழவோன்' உரியோன்; வீடுபேற்றைத் தருதற்கு உரியவன்; கிழமை - உரிமை. -உ

‘அருக்கனிற் சோதி அமைத்தோன்' என்றது ஞாயிறிற் காணப்படும் ஒளிவிளக்கம் இறைவன் அதன்கண் முனைத்து நிற்றலால் அமைக்கப்பட்டதென அறிவித்தது. உலகின்கட் காணப்படும் எல்லா ஒளிகளும் அறைவன்றன் ஒளிவிளக்க மாதல் தெரித்தற்பொருட்டே,

“நாயகன் கண் நயப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாய் இருளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்

தூய நேத்திரத் தினாலே சுடரொளி கொடுத்த பண்பின் தேயம் ஆர் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசதென்னார்"

என்னுஞ் சிவஞானசித்தித் திருமொழியும்* (சிவஞான சித்தியார் 1.52) எழுந்த தென்க. “அருக்கனாவான் அரனுரு அல்லனோ” என்னும் அப்பர் தேவாரமும் உற்று நோக்கற்பாற்று.

“திருத்தகு மதியில் தண்மை வைத்தோன்” என்றது திங்களிற் குளிர்ந்த ஒளியாய் இறைவன் விளங்கிநின்று அதனை அதன்கண் அமைத்தானெனக் கூறியவாறாம்.

'திருத்தகு' பொலிவு பொருந்தும் எனப் பொருள் படுதலைச் “செழுந்தா தவிழ்பொழி லாய்த்துச்சேர்க திருத் தகவே” (திருக்கோவையார் 124) என்பதற்குப் பேராசிரியர் உரைத்த வுரையிற் காண்க.

எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்லதாகலின் 'திண் திறற்றீ' என அடைகொடுத்தார்.

உலகாயத நூலார் கூறுமாறு பொய்யாகாமல், ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடமாய் என்று முள்ள பொருளாகலிற் 'பொய்தீர்வான்' என அருளிச் செய்தார்.

ஊக்கம்' கிளர்ச்சி, முயற்சி எனப் பொருள்படுதல் திவாகரத்துட் காண்க.

நிழல்' ஒளி என்னும் பொருட்டாதல் "நிழல்கால் நெடுங்கல்"* (சிலப்பதிகாரம் 5.127) என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய வுரையிற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/257&oldid=1589492" இலிருந்து மீள்விக்கப்பட்டது