உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

35

திருவாசக விரிவுரை

முன்னோன் காண்க முழுதோன் காண்க தன்நேர் இல்லோன் தானே காண்க ஏனத் தொல்எயி றணிந்தோன் காண்க கானப் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க பரமன் காண்க பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அநேகன் காண்க

40

சொற்பதங் கடந்த தொல்லோன் காணக

சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையிற் படுவோன் காண்க

ஒருவன் என்னும் ஒருவன் காண்க

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க 45 அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க அரியதில் அரிய அரியோன் காண்க

மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க 50 மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க யாவரும் பெறஉறும் ஈசன் காண்க தேவரும் அறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க கண்ணாலியானுங் கண்டேன் காண்க அருள்நனி சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியிற் சேவடி தீண்டினன் காண்க

55

60

225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/258&oldid=1589493" இலிருந்து மீள்விக்கப்பட்டது