உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

❖ 25❖ மறைமலையம் - 25

சிவன்என யானுந் தேறினன் காண்க அவன்எனை ஆட்கொண் டருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க

65 அவளுந் தானும் உடனே காண்க

-

முன்னோன் காண்க - எப்பொருட்கும் முன் உள்ளவன் காண்க, முழுதோன் காண்க - எல்லாவற்றையும் உடையவன் காண்க, தன் நேர் இல்லோன் தானே காண்க தனக்கு ஒப்பாவதொன்றும் இல்லாதவன் காண்க, 'ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க என்பதனைத் தொல் ஏன எயிறு அணிந்தோன் காண்க என மாற்றிப் பழையதொரு பன்றியின் கூர்ம் பல்லினை அணிந்துகொண்டவன் காண்க என உரைக்க, கானப்புலி உரி அரையோன் காண்க - காட்டின்கண் வந்த புலித்தோலை உடுத்த கடிதடத்தினை உடையோன் காண்க, நீற்றோன் காண்க - திருநீற்றை யணிந்தவன் காண்க, நினை தாறும் நினைதொறும் ஆற்றேன் காண்க இறைவன் திருவுருவப் பொலிவினை நினைக்குந்தோறும் நினைக்குந் தோறும் அவனைப் பிரிந்திருத்தலைப் பொறேன் காண்க, அந்தோ கெடுவேன் - அவனது பிரிவினைப் பொறாமையின் ஐயோ யான் கெட்டொழிவேன்.

-

இனிய

இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க - ஒலியும் அதனையுடைய வீணையும்போல் தூய உயிர்களில் யைந்திருப்பவன் காண்க, அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க - அவ்வியல்பினதாகிய வீணையின் அரிய சை ஒன்றனை அவ்வீணையில் அறிந்தவன் காண்க, பரமன் காண்க - எல்லாவற்றிற்கும் மேலானவன் காண்க, பழையோன் காண்க - எப்பொருளினும் பழையனாயினோன் காண்க, பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க - நான்முகனுந் திருமாலுங் காணாத பேரியல்பினன் காண்க. அற்புதன் காண்க வியத்தகு தன்மைகள் உடையோன் காண்க, அநேகன் காண்க - பல வடிவாயிருப்பவன் காண்க, சொல் பதம் கடந்த தொல்லோன் சொல்லின் தரத்தையுங் கடந்த பழையவன் காண்க, சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க - மனமுஞ் சென்று பற்றாத சேய்மைக்கண் உள்ளவன் காண்க, பத்தி வலையிற் படுவோன் காண்க - பேரன்பாகிய வலையில் அகப்படுவோன் காண்க, ஒருவன் என்னும் ஒருவன் காண்க - உலகிற்கு ஒரு முழு

காண்க

-

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/259&oldid=1589495" இலிருந்து மீள்விக்கப்பட்டது