உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

227

முதல்வனே என்று சொல்லப்படும் ஒப்பற்றவன் காண்க. விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க - விரிந்த உலகம் எல்லாமாய் விரிந்து நின்றவன் காண்க, அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க ஒரு சிறு துகளின்கட் காணப்படுந் தன்மையைப்போல வியக்கப்படும் நுண்மையுடையோன் காண்க, இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க ஒப்புச் சொல்லுதற்கு அரிய பெருமையினையுடைய தலைவன் காண்க, அரியதில் அரிய அரியோன் காண்க அருமையுடைப் பொருளிலும் அருமை யுடைய அரியவன் காண்க, 'மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க என்பதனை எப்பொருளும் மருவி வளர்ப்போன் காண்க என மாற்றி எல்லாப் பொருள்களினும் நண்ணி அவற்றை வளர்த்துவருவோன் காண்க எனப்பொருள் உரைக்க,

நூல்

உணர்வு

யு

உணரா

-

நுண்ணியோன்

காண்க

-

-

நூற்பொருள் உணர்ச்சியினால் உணரப்படாத நுட்பத்தினை யுடையோன் காண்க, மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க - மேலுங் கீழாய் விரிந்தோன் காண்க - மேலும் கீழுமாய் விரிந்து நின்றவன் காண்க, அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க - ஈறும் முதலும் விட்டு நின்றவன் காண்க, பந்தமும் வீடும் படைப்போன் காண்க - கட்டுட் வீடும் உண்டாக்குவோன் காண்க, நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க - அசையாப் பொருளும் அசையும் பொருளுமாய் நின்றவன் காண்க, கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க கற்ப காலமும் அதன் முடிவும் ஒருங்கே கண்டவன் காண்க, யாவரும் பெற உறும் ஈசன் காண்க அன்பராயினார் எப்படிப்பட்டவராயினும் அவர் தனதருளைப் பெறுமாறு அவர்பாற் சென்று பொருந்தும் தலைவன் காண்க,

-

தேவரும் அறியாச் சிவனே காண்க -அன்பர் அல்லாதார் கடவுளரே யாயினும் அவரால் அறியப்படாத சிவனே காண்க, பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க - பெண்ணும் ஆணும் இவையிரண்டுமல்லாத அலியும் என்னும் இவற்றின் தன்மைகளை யுடையோன் யோன் காண்க, கண்ணால் யானும் கண்டேன் காண்க - ஒன்றுக்கும் பற்றாத யானும் என் ஊனக் கண்ணால் நினது திருவுருவைக் கண்டேன் காண்க, அருள் நனி சுரக்கும் அமுதே காண்க. - அருளினை மிகுதியுஞ் சுரக்கும் அமுத ஊற்றே காண்க, கருணையின் பெருமை கண்டேன் காண்க -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/260&oldid=1589496" இலிருந்து மீள்விக்கப்பட்டது