228
–
- மறைமலையம் - 25
அருளினது பெருமையினைக் கண்டேன் காண்க, புவனியிற் சே அடி தீண்டினன் காண்க - இந்நிலத்தின் மேல் தனது செவ்விய திருவடி படச் செய்தனன் காண்க, சிவன் என யானும் தேறினன் சிவபெருமான் என்று யானுந் தெளிந்தேன் காண்க,
காண்க
-
-
அவன்
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க என்னை அடிமைகொண்டு அருள் செய்தனன் காண்க, குவளைக் கண்ணி கூறன் காண்க - நீலமலர் போலுங் கண்களையுடைய உமைப் பிராட்டியாரை ஒரு கூற்றில் உடையவன் காண்க, அவளும் தானும் உடனே காண்க - அம்மையாகிய அவளும் அப்பனாகிய தானும் உடனே காண்க என்றவாறு.
உ
ஏனத் தால்லெயி றணிந்த' வரலாறு சிவரகசிய கண்டத்திற் சொல்லப்பட்டது. இரணியாக்கன் என்னுங் கொடிய ஓர் அரக்கன் இந்நிலத்தைப் பாய்போற் சுருட்டி எடுத்துக்கொண்டு கீழுலகத்தில் மறைந்து போயினனாகத், திருமால் ஒரு பன்றி வடிவெடுத்துச் சென்று அவனை மாய்த்து அவனது செங்குருதியினைப் பருகி வெறிகொண்டு உலகங்களை யெல்லாந் துன்புறுத்தலானார். அத்துன்பம் பொறுக்கலாற்றாத கடவுளர் இறைவனை அணுகிக் குறையிரப்ப, அவர் அப்பன்றி யின் பல்லைப் பிடுங்கி அணிந்தனர் என்பது.
‘தொல்' என்பதனை ஏனத்திற்கு அடையாக்கிப் பழைய ஏனம் என்க; அது திருமால் பிறப்பினில் ஒன்று. எயிறு என்பன வாயின் முன்னுள்ள பல் வரிசைகளின் இருகடையினு மமைந்த கூர்ம்பற்கள்; "கோட்டிளங் குழவித் திங்க ளிரண்டன்ன எயிற்றுக் கோளே”* (கனகமாலையாரிலம்பகம் - 183) என்றார் சிந்தா மணியினும்.
'கானப் புலியுரி யரையோன்' என்றது தேவதாரு வனத்து இருடிகள் ஏவிய வெம்புலியின் றோலை உரித்து அதனை அரைமேல் உடுத்துக்கொண்டமையினை; இது கந்தபுராணத்திற் சொல்லப்பட்டது. உரி உரித்தெடுக்கப்பட்ட தோலினுக்கு ஆகுபெயர்.
-
அழல் வடிவாய் விளங்கும் இறைவன் மாப்பேரூழிக் காலத்து எல்லாப் பொருள்களையும் எரித்து நீறாக்க, அங்ஙனம் நீறாய அவை அப்போதும் அவனையன்றிப் பற்றுதற்குப் பிறிதொன்றனைக் காணாமையின் அவனையே களைகணாப்