உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் 25

சிவம் அஃது அதன்வழி நின்றவளவானே புலப்பட்டுத் தன் இன்பவுருவினைக் காட்டு மென்பதாம்.

அன்னதொன் றவ்வயி னறிந்தோன்' என்றது மதுரையிற் பாணபத்திரனென்னும் அன்புமிக்க ஓர் யாழ்ப்பணன் பொருட்ட இறைவன் சாதாரிபாடின திருவிளையாடலைக் குறிக்கின்றது. அது வருமாறு : பாணபத்திரன் என்னும் யாழ்ப்பணன் சிவபெருமான்மாட்டும் சிவனடியார்மாட்டும் சிறந்த மெய்யன்புடையோனாய், அக்காலத்து மதுரையிற் செங்கோல் ஓச்சிய பாண்டிய மன்னனுக்கு யாழிற் பண்பாடும் தொழில்மேற் கொண்டுவந்தான். இடையே ஒருநாள் மற்றோர் யாழ்ப்பணன் இசைபாடுதலில் மிகவல்லான் பரிசில் பெறுதற் பொருட்டுப் பாண்டிய மன்னனிடம் போந்து மிக இனிய இசைகளைப் பாடினான். அவன் பாடிப் பரிசு பெற்ற அளவின் என்னையொப்ப

அமையாது

சைபாட வல்லார்

இங்குளரோ?' வெனச் செருக்கிக் கூறினான். அதுகேட்ட பாண்டிய அரசன் அவனை ‘நாளைவருக' வெனப் போக்கி, உடனே தன் பாணபத்திரனை வருவித்து ‘என்னின் மிக்கார் இல்லையெனத் தருக்கிக் கூறும் இப்பாணனை நீ இசையில் வெல்ல வல்லையோ?' என வினாவ, 'நீயும், அடியார்க்கு உயர்வுதரும் சொக்கலிங்கப் பெருமானும் இருப்ப என்னோ டொப்ப இசை பாடவல்லார் ஒருவர் இந்நிலத்தின் மீது உளராவரோ! யான் அவனை இசையில்வென்று ஓட்டி விடக்கடவேன்' என்று கூறித் தனது இருக்கை சேர்ந்தான். சேர, வந்த பாணன் உடன் வந்த பாடுவார்கள் தமது இசை வன்மை காட்டல்வேண்டித் தம்முடைய இசைக்கருவிகளை இயக்கிக் கொண்டு அரிய இனிய னிய இசைகளைப் பாடியபடியாய் அந்நகரமெங்கும் உலவினர்.

இவர்தம் இசைத் திறமையினைக் கண்ட பாணபத்திரன் பெரிதும் மனம் மருண்டு 'இவரே அத்துணை வல்லராயின், இவர் தமக்குத் தலைவனாவான் எத்துணைவல்லனாம். அவனை யான் பாண்டியன் அவைக்களத்தே வெல்லுமாறியாங்ஙனம்' என்று வருந்திச் சிவபெருமானுக்குத் தன் குறையினையறிவிப்ப, அவன் தன் அடியவன் படும் துயர்தீர்த்தற்குத் திருவுளம் இரங்கி ஒரு விறகுதலையனாய் வடிவெடுத்துப், புதிய பாணன் அமர்ந்திருக்கும் இல்லம் நண்ணி, விறகு கட்டினைக் கீழே வைத்துவிட்டு, இளைப்பாறுவான் போல் அங்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/263&oldid=1589499" இலிருந்து மீள்விக்கப்பட்டது