உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

231

திண்ணைமேற்கிடந்து கொண்டு, சாதாரி என்னும் பண்ணை உலகத்தின்கண் உள்ள இயங்குதிணை நிலைத்தினை என்னும் எல்லாப்பொருள்களும் உருகுமாறு பாடினான். அது கேட்டு உள்ளிருந்த புதிய பாணன் வெளியேபோந்து ‘நீ யார்?' என்று வினாவ, ‘யான் பாண பத்திரர்க்கு ஏவல் புரியும் அடியவன் என்று ஐயன் விடைகூற, அவன் பெரிதும் அஞ்சித் ‘தனக்கேவல் புரியும் அடியனது இசைத் திறமே அளக்கலாகா இத்துணைச் சிறப்பினதாயின், இவன்றன் தலைவனாம் பாணபத்திரன் எத்துணைச் சிறந்த புலமை யுடையோனாம்! ஆகையால், அவைன வெல்லுதலியலாது!' என்று கருதி, எவர்க்குந் தெரிவியாமே தங்கூட்டத்தாரோடும் இரவே அந்நகரை விட்டுப் போயினான் என்பது.

‘அன்னது' என்னுஞ் சுட்டு மேலடியிற்போந் ‘இன்னிசை’ யினையும், ‘அவ்வயின்' என்னுஞ் சுட்டு ‘வீணை' யினையும் குறித்தல் உற்றறியற்பாற்று.

66

“நிலன்நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய் மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து” நிற்றல்பற்றி இறைவனை ‘அநேகன்” என்றார்.

'சொற்பதம்' என்னுஞ் சொற்றொடரிற் ‘பதம்' தரம் என்னும் பொருட்டாம்; இப்பொருட்டாதல் “பெண்டிருந் தம்பதங் கொடுக்கும்” என்னும் புறப்பாட்டிற்* (புறநானூறு 151)

காண்க.

சித்தம்மனம், திவாகரம்.

வேறொன்றானும் பற்றப்படாத முதல்வன் அன்பு ஒன்றான் மட்டும் பற்றப்படுதலிற் ‘பத்திவலையிற் படுவோன்' என்றார்; இது சிறுபான்மையுருவகம்,படுவோனை அரிமாவாகக் களிந்து கூறாமையின்.

மாப்பேரூழிக்காலத்தில் முழுமுதற் கடவுள் ஒருவரே உளராதலாலும், அவரோடொப்பர் பிறர் எவரும் ஆண்டு இன்மையாலும் ‘ஒருவனென்னும் ஒருவன்' என்றார்; இங்ஙனமே சுவேதாசுவதரோப நிடதமும் “சிவ ஏவ கேவல:" என்று கூறுதல்

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/264&oldid=1589501" இலிருந்து மீள்விக்கப்பட்டது