உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

  • மறைமலையம் 25

'விரிபொழில்' என்பதிற் பொழில் உலகம் எனப் பொருள் படுதலை “ஏழுடையான் பொழில்" (திருச்சிற்றம்பலக் கோவை யார் 7) என்று அடிகள் பிறாண்டும் ஓதியவாற்றாற் காண்க.

66

யோன்' என்பதில் ஐ வியப்புப் பொருட்டாதல் ஐவியப்பாகும்" (தொல்காப்பியம் உரியியல் 89) என்னும் உரியியற் சூத்திரத்தாலுணர்க. இனிப் பிங்கலந்தையிற் கூறியவாறு ஐ நுணுக்கம் எனப் பொருளுரைப்பினும் ஆம்.

‘ஈசன்' தலைவன் எனப் பொருடரும் வடசொற் றிரிபு. நூற்பொருளுணர்ச்சி பெற்ற வளவானே இறைவனியல்பை யுணர்ந்து இன்புறுதல் செல்லாமையின் ‘நூலுணர் வுணரா நுண்ணியோன்' என்றார். தேமா இன்னதென நூலானும் பிறர் வாயுரையானுங் கேட்டுணர்ந்தோன், அவ்வாறுணர்ந்த வளவானே அதனைக் காண்டலும் அதன் கனியைச் சுவைத்தலும் மாட்டுவானல்லன்; பின்னர் அதனைத் தானே முயன்று தேடிக் கண்டு அதன் கனியைச் சுவைத்தான் மட்டும் அதனை நன்கு உணர்ந்து பயன் பெற்றானாவன், நூலறிவு ஒருவற்குள்ள இயற்கை யறிவினையும் முயற்சியையும் எழுப்புதற் கருவியே யாகுமல்லது அது தானே அவற்கு எல்லாப் பயனையுந் தரவல்லதன்றென்பது பற்றி, அடிகள் இங்ஙனம் அருளிச் செய்தரென்க. அற்றாயினும், “தொட்டனைத் தூறும் மணற் கேணி மாந்தர்க்குக், கற்றனைத் தூறும் அறிவு" என்பதனால், நூலறிவு பெறாமல் ஒருவற்குள்ள இயற்கையறிவு விளங்கா மையின், அதனை விளக்குதற்பொருட்டு உயர்ந்த பல அறிவு நூற்பயிற்சி இன்றியமையாது வேண்டற்பால தொன்றேயா மென்க.

'மேலொடு கீழாய் விரிந்தோன்' என்பது மேல் நிற்குஞ் சுத்தமாயா வுலகம் முதற் கீழ்நிற்கும் அசுத்தமாயா வுலகம் ஈறான மாயையின் பரப்புமுழுதும் விரிந்துநிற்கும் அவன்றன் விரிவினை உணர்த்தியது. மேல் கீழ் என்பன ஆகுபெயர்.

அங்ஙனம் மாயையின் பரப்பெல்லாம் தான் விரிந்திருப் பினும், அம்மாயையிற் காணப்படுந் தோற்றமும் ஈறும் தனக்கில் லாதவன் என்று குறிப்பிப்பார் அந்தமும் ஆதியும் அகன்றோன் என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/265&oldid=1589502" இலிருந்து மீள்விக்கப்பட்டது