உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

233

பெண் ஆண் அலி எனும் மூவகை அமைதியும் இறை வனால் ஆக்கப்பட்டே இவ்வுலகின்கட் காணப்படுதலானும், இவற்றை யமைத்தவன் மாட்டும் அம்மூன்று தன்மைகளும் இருந்தன்றி இவையுளவாதல் செல்லாமையானும் ‘பெண் ஆண் அலியெனும் பெற்றியன்' என்றார்.

'கண்ணாலியானுங் கண்டேன்' என்றருளிச் செய்த மையால், அடிகள் இறைவனை நேரே கண்டருளின வுண்மை மறுக்கப் படாதெனவுணர்க. அவர் கடவுளை நேரே கண்டார், இவர் கடவுளை நேரே கண்டார் எனப் பிறர் தாந்தாம் விரும்பிய வாறு பிறரை உயர்த்துக் கூறும் பொய்யுரை போலாது, கடவுளை நேரே கண்டருளிய திருவாதவூரடிகள் அதனைத் தாமே தெளிந்துரைக்கும் இம்மெய்யுரை மெய்யாய் விளங்கும் விழுப்பம் பகுத்துணர்ந்து கடைப்பிடிக்கற் பாற்று.

அருணனி சுரக்கும் அமுது' என்பதில் அருள் தீ நீராகவும் சிவம் அது சுரக்கும் அமுதவூற்றாகவும் உருவகஞ் செய்யப் பட்ட ன. இதுவுஞ் சிறுபான்மையுருவகம்.

புவனியிற் சேவடி தீண்டினன் சிவனெனயானுந் தேறினன் அவனெனை யாட்கொண்ட டருளினன்' என்னும் மூன்றடிகளானும், நிலமிசைச் தன்றிருவடிதோய வந்து தம்மை யாண்டவன் சிவபெருமானேயெனத் தாம் தெளிந்தவாறு கூறினார்; இவற்றாலும் அடிகள் இறைவனால் நிலத்தின்மேல் நேரே அடிமை கொள்ளப்பட்ட சீர் இனிது புலப்படுதல் காண்க.

'குவளைக் கண்ணி கூறன்' என்பதும் ‘அவளுந்தானும் உடனே காண்க' என்பதும் முழுமுதற் பொருள் அம்மையும் அப்பனுமாய் நின்ற முறையை உணர்த்திற்று.சிவமுஞ் சத்தியும் இருமுதற் பொருள்களாம் உண்மை. இவ்வாற்றால் நன்கு தெளியப்படும், இனிச் சிவமுஞ் சத்தியும் குணியுங் குணமுமாய் நிற்கும் ஒரு முதற் பொருளேயாம் என்பாரும் உளர். அது பொருந்தாது; என்னை? இறைவனை அறியாது மயங்கி நின்ற கடவுளர் முன் இறைவி வெளிப்பட்டுத் தோன்றி இறைவனை அறிவுறுத்தினாளென்று கேநோபநிடதத்தின்கட் சொல்லப் படுதலானும். இறைவி இறைவனை நோக்கித் தவமியற்றினா ளெனவும், இறைவன் இறைவியை மணந்து கொண்டானெ னவுங் கூறும் பழைய வரலாறுகளெல்லாம் அவர் குண குணிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/266&oldid=1589503" இலிருந்து மீள்விக்கப்பட்டது