உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

-

மறைமலையம் - 25

பொருள்களாயிற் பொருத்தமாதல் செல்லாமையானும், உலகின்கண் இருவேறு வகையவாய்க் காணப்படும் ஆண் பெண் வடிவங்கட்கு முதலாய் நிற்குஞ் சிவமுஞ் சத்தியுமாய இருவேறு அறிவுருவங்கள் இன்றியமையாது வேண்டப்படுத லானும் என்பது.

பற்றி,

அற்றேற், சிவமுஞ் சத்தியுங் குணிகுணங் கள்போல் வைத்து அறிவு நூல்கள் ஓரோவழிக் கூறுதல் என்னையெனின்; பண்பும் அதனின் வேறன்றாய் எண்ணப்படும் பண்பியும்போலச் சத்தி சிவங்களிரண்டும் அத்துணை நெருக்க மாய்ப் பிணைந்திருத்தல் அவ்வியைபினுக்கு ஒத்த வேறொன் றனைக் காட்டலியலாது. பண்புக்கும் பண்பிக்கும் உளதாம் தற்கிழமை யியைபினையே அதற்கெடுத்து அவை காட்டா நிற்கும். அவ்வாறு காட்டுதல் கொண்ட அவை யிரண்டனையும் பண்பும் பண்பியுமாய்க் கோடல் பொருந்து மாறில்லை யென்க. இவ்வுண்மை தெரித்தற் பொருட்டன்றே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார் “அண்ணல்தாள், அத்துவிதமாதல் அருமறைகள் ஒன்றென்னா, தத்துவிதம் என்றறையும் ஆங்கு” என்று அருளிச் செய்ததூஉம் இருபொருட் கலவையே அத்துவித இயைபெனக் கூறப்படுதற்கு ஏற்பதா மன்றி, ஒன்றேயாம் பண்பும் பண்பியும் அங்ஙனம் அத்துவிதப் பெயரான் வழங்குதற்கு ஏலாமையும், அன்றி அங்ஙனம் வழங்கலுறின் அஃது ஏகான்மவாதங் கூறும் மாயாவதி கோட்பாடாய் முடியுமாறும் நுணுகியறிந்து கொள்க. சத்தி சிவங்களிரண்டும் இருமுதற் பொருள்களென வுரைப்பின், உலகிற்கெல்லாம் ஒரு முழுமுதற் கடவுளென்பது போய், முதல்வர் இருவருளரெனப்பட்டு அநேகேசுரவாதமாய் முடியுமாலெனின்; அற்றன்று, சிவம் ஒன்றே ஆண்மையும் அறிவும்மிக்கு எல்லாவற்றையுந் தன்னுள்ளடக்கி விரிந்து எங்கணும் நிறைந்து நிற்கும் தனி முழுமுதற்பொருளாம்; சத்தி பெண்மையும் அன்பும்மிக்கு அச்சிவத்தோடிரண்டறக் கலந்து அதனுள் அடங்கி விரிந்து நிறைந்து நிற்பதொரு முழுமுதற் பொருளாம்; இங்ஙனம் முதற்பொருள் இரண்டாயிருப்பினும், ஆண்டுஞ் சிவம் ஒன்றே சத்தியைத் தன்னுள்ளடக்கித் தனி முதன்மைப் பெரும்பொருளாய் நிற்குமாகலின் அஃது அநேகே சுரவாதமாதல் ஒருவாற்றானும் இல்லையென்க. இப் பெற்றி யெல்லாம் சிவஞானபோத வாராய்ச்சியில் அம்மையப்பர் அத்துவிதவியைபு உரைக்கின்றுழி விரித்து விளக்கினாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/267&oldid=1589504" இலிருந்து மீள்விக்கப்பட்டது