உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

❖ - 25❖ மறைமலையம் – 25

அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட உழவர் ஆரத்தந்த

95 அண்டத் தரும் பெறல் மேகன் வாழ்க

(இறைவியும் இறைவனும் ஒருங்குகூடி நோக்கும்) பரம ஆனந்தப் பழங்கடல் அதுவே -மேலான இன்பப்பழங்கடலாகிய அதுவே, கருமாமுகிலின்தோன்றி - கரிப் பெரிய மேகம்போலத் தோன்றி, திருஆர் பெருந்தறை வரையில் ஏறி - அழகு நிறைந்த பெருந்துறையாகிய மலைமேல் ஏறி, திருத்தகும் மின்ஒளி திசை திசை விரிய - பொலிவு பொருந்தும் மின்னல் ஒளியானது திக்குகடோறும் பரவ, ஐம்புலப் பந்தனை வாள் அரவு இரிய ஐம்பல அவாவின் கட்டாகிய ஒளியினையுடைய பாம்புகள் கெட, வெம்துயர்க் கோடை மாத்தலை கரப்ப - வெம்மையாகிய துன்பத்தைச் செய்யும் வேனிற்காலம் தனது பெரிய தலையை ஒளித்துக் கொள்ள, நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர மிகுந்த அழகினையுடைய தோன்றிப்பூக்கள் ஒளி சிறந்து விளங்க, எம்தம் பிறவியின் கோபம் மிகுத்து - எம்முடைய அளவில்லாப் பிறவிகளைப்போல் இந்திரகோபப் பூச்சிகளை மிகுதியாய்த் தோற்றுவித்து, முரசு எறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கி - முரசு அடித்தால் ஒப்பப் பேர் அருளினால் முழக்கத்தினைச் செய்து, பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட தாமரைப் பூவின் கூம்புதலை யொப்ப அடியார் மேலே கூப்பிய கைகள் காந்தண் மலரைப்போல் தோன்றாநிற்க, எஞ்சா இன் அருள் நுண்துணி கொள்ள - குறையாத இனிய அருளாகிய சிறு துளிகள் விழா நிற்ப, செஞ்சுடர்வெள்ளம் திசைதிசை தெவிட்ட சிவந்த ஒளியினையுடைய வெள்ளமானது திக்குகடோறும் திரள,

ஓங்கி

-

-

வரைஉற மலையை யடைந்து, கேதக் குட்டம் கைஅற - துன்பமாகிய குளம் தன்செயலற்றுப் போக உயர்ந்து, இருமுச்சமயத்து ஒரு பேய்த் தேரினை அறுவகைச் சமயங் களாகிய ஒரு கானல் நீரினை, நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் - தண்ணீர்விடாய் மிகுதிப்பட நீரைத் தேடிவரும் பெரிய கண்களை உடைய மான்கூட்டம் தவப்பெரு வாயிடைப் பருகி - மிகப் பெரிய வாயினிடத்தே குடித்தும், தளர்வொடும் அவப்பெருந்தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை தளர்ச்சி யோடும் கேட்டினைச் செய்யும் பெரிய வெம்மை நீங்கப் பெறாது வருந்தினவாகிய அவ்விடத்தே,

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/269&oldid=1589506" இலிருந்து மீள்விக்கப்பட்டது