உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திருவாசக விரிவுரை

237

வானப்பேர் யாற்று அகவயின் பாய்ந்து எழுந்து வானின்கண் உள்ள பெரிய யாற்றின் உள்ளிடத்திற் பாய்ந்து பின்னர் எழுச்சி பெற்று, இன்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து இன்பமாகிய பெரிய கழியினைத் தெள்ளிச் சுழித்துக் கொண்டு சென்று, எம் பந்தம் மாக்கரை பொருது அலைத்து இடித்து-எமது கட்டாகிய பெரிய கரையினை முட்டி அலைத்து இடித்து, ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்பறித்து எழுந்து - முறை முறையே உயர்ந்த நம்முடைய இரு வினைகளாகிய பெரிய மரத்தை வேரோடு பறித்து எழுந்து, உருவ அருள்நீர் ஓட்டா - அழகிய அருள் என்னும் நீரை ஓடச்செய்து, அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி அரியமலைகளில் வளர்ந்த சந்தனமரங்களால் பரிய அணையைக் கட்டி, மட்டு அவிழ் வெறி மலர்க்குளவாய் கோலி தேன் விரிகின்ற மணத்தினையுடைய பூக்கள் நிறைந்த குளங்களின் இடத்தை வளைத்து, நிறை அகில் மாப்புகைக் கரைசேர் வண்டு உடைக் குளத்தின் மீன்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி - நிறைந்த அகிலின் பெரிய புகையினை யுடைய கரைகள் சேர்ந்த வண்டுகள் மொய்க்கும் குளங்களின் மேற்கொண்டுவர அதனை மேலும்மேலும் மகிழ்ச்சியோடும் உற்றுப் பார்த்து, அருச்சனை வயலுள் அன்புவித்து இ வழிபாடு என்னும் வயலினுள்ளே அன்பு என்னும் வித்தை இ ட்டு விளைத்து, தொண்ட உழவர் ஆரத்தந்த தொண்டர் களாகிய உழவர்கள் உண்ணும்படியாகத் தந்த, அண்டத்து அரும் பெறல் மேகன்வாழ்க - அருள்வெளியின்கட் பெறுதற்கரிய மேகம்போல் விளங்குவோன் வாழ்க! என்றவாறு.

-

டு

-

இறைவனும் இறைவியும் ஒருங்குகூடி உயிர்கட்குச் செய்யும் பேரருள் பரமானந்தப் பழங்கடலா யிருத்தலின், மேலே 'குவளைக் கண்ணி கூறன் காண்க, அவளுந் தானும் உடனே காண்க' எனக் கூறியதனோடு அடுக்கப் பரமானந்தப் பழங்கட லதுவே என்பதனை வைத்துரைத்தார்.

கடல்நீரின் ஒரு பகுதியே கருமுகிலாய்த் திரிபுறுதல் உலகின்கட்காண்டும்; மற்று இப்பேரானந்தப் பழங்கடலோ முழுதும் முகிலாய்த் திரிபுற்றது ஒரு வியப்பென்பார் 'அதுவே கருமா முகிலிற்றோன்றி' என்றார். கடல்நீரின் ஒரு சிறுபகுதி மட்டும் முகிலாய்த் திரிந்து மழையைப் பொழியுங்கால், அது தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/270&oldid=1589507" இலிருந்து மீள்விக்கப்பட்டது