உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii

  • மறைமலையம் 25

விளங்கக் கோவையும் வாசகமும் நெறியுறச் செய்தார் என விளக்கந் தந்தமை தொல்லாசான் தொல்காப்பியன் காட்டிய நெறிமுறையதாம்.

66

முதல் ஐந்து அடிகளுக்கு மட்டும் முப்பது பக்கம் விரிவுரை வரையும் அடிகள் நோக்கு, இவ்வாறு விரித்து வேண்டுவ கொண்டு காண்பார் கண்டு கொள்க” என்று எடுத்துக் காட்டுவது போல்வதாம்.

இதில் வரும் 'கோகழி' என்பதைத் திருவாவடுதுறை என்பாரும், வானகம் என்பாருமாக, அடிகள் பொருந்திய வகையால் அருட்பத்தில்,

“திருந்துவார் பொழிசூழ் திருப்பெருந் துறையிற்

செழுமலர்க் குருந்தமே வியசீர்

இருந்தவா றெண்ணி”

என்பதை எடுத்துக் காட்டி நிறுவுகிறார். (27)

'பிறப்பு அறுத்தல்' என்பதற்கு, “பிறவியை மரமாக உருவகம் செய்தல் அடிகட்குக் கருத்தாதலை அடைக்கலாப்பத்தில், "நின்திருவருளால் என்பிறவியை வேர் அறுப்பவனே” என்றும்,

“பெரும் பெருமான் என்பிறவியை வேர் அறுத்துப் பெரும்பிச்சுத் தரும் பெருமான்' என்றும்

வரும் தொடர்களைக் கொண்டு நிறுவுகிறார்.

“புல்லாகி பூடாய்... மரமாய்”

என வேருடையவற்றை முற்படச் சுட்டுதல் எண்ணத் தக்கது (26)

ப்பாட்டின் பொருளை நிறைவில் திரட்டித்தந்து

இது கடவுட் பராய முன்னிலைக் கண் வந்த பாடாண் பாட்டு என நிறைவு செய்கிறார்.

தொல்காப்பியத்துவரும் 'சீர்த்தி’ முதல் வ வல்லினம்

ககரமாகமாறிக் ‘கீர்த்தி'யாயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/29&oldid=1589157" இலிருந்து மீள்விக்கப்பட்டது