உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 6

xxix

தில்லை மூதூர், மன்னுமாமலை மகேந்திரம் கல்லாடம் பஞ்சப்பள்ளி முதலாக ஊரூர்தோறும் இறைவன் அருளிப்பாடுகளை அடுக்கிக் கூறி முடிப்பது கீர்த்தித் திருவகவல் ஆகும். திருவிளையாடற் புராணங்களுக்கு மூலக் கொடையென அமைந்தது இவ்வகவல் என்பது,

மதுரைப் பெறுநன் மாநக ரிருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் ஆங்கது தன்னில் அடியட் காகப்

பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்’

என்பவை கொண்டு தெளியலாம்.

44-47

அண்டப்பகுதி எனத் தொடக்க முறும் மூன்றாம்பாடல் திரு என்னும் அடை சேரப் பெற்றுத் ‘திருவண்டப்பகுதி' எனப் பெயர் பெறுவதாயிற்று அடி அளவான் மிக்கது போற்றித் திருவகவல் ஆயினும் (225) திருவண்டப்பகுதியே செறிவும் விரிவும் மிக்கதாக (182) உரை கொள்கின்றது.

66

'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன்” 1-6

இப்பதிக்கு,

ஒன்றுக் கொன்று மேற்பட்டு நின்ற எழுச்சியினைச் சொல்லுமிடத்து நூற்றொரு கோடியினும் மிகுதிப்படப் பரந்தனவாகிய அண்டப் பகுதிகளின் திரண்ட வடிவின் பெருக்கமும் அளத்தற்கு அரிய தன்மையும் வள்பபாடு உடைய பெரிய தோற்றமும் மனையினுட் புகும் ஞாயிற்றின் கதிரிற் பொருந்திய அணுக்களை ஒப்ப, சிறியனவாகத் தோன்றுமாறு பேரளவினை யுடையோன்”.

எனப் பொருள் காணும் அடிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/30&oldid=1589159" இலிருந்து மீள்விக்கப்பட்டது