உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXX

66

  • மறைமலையம் - 25

இந் நிலத்தின்மேல் வானில் காணப்படும் ஏனை உலகங்களும் உருண்ட வடிவினவாய் இருத்தலை மேல்புல வானூலார் கண்டவாறே பண்டை நாளில் இருந்த நம் அடிகளும் கண்டறிந்தமை குறிக்கொளற் பாற்று”

என்கிறார். மேலும்,

66

வீட்டின் கூரை முகட்டுச் சிற்றிடுக்கின் வழியே அதன் அகத்துப் புகும் ஞாயிற்றின் கதிரில் விரைந்தாடும் துகள்களைக் கண்டு உவமையாக எடுத்தோதிய ய வனப்பு வியக்கற்பாலது” என்னும் கூறுகிறார்.

6

சாலவும்

மாயையில் இருந்து உலகம் தோற்றுவிக்கப்பட்டது என்பதுபற்றி விரிய விரிய ஆய்கிறார் அடிகள். பல்வேறு சமய ஆய்வுகளையும் கொண்டு 2றைமை இயலை நிலைப் படுத்துகிறார்.

66

"அற்றை நக்கீரரும் பிற்றைச் சிவஞான முனிவரும் இற்றை அடிகளாராக விளங்குகிறார்” என்னும்

திரு.வி.க. உரையை மெய்ப்பிக்கிறார்.

சைவ மதம் என்பது நிலம் நீர் தீ வளி வெளி ஞாயிறு திங்கள் உயிர் என்னும் எண்வகைப் பொருள்களொடும் புணர்ந்து படைப்பு காப்பு அழிப்பு மறைப்பு அருள் என்னும் ஐந்தொழில்களையும் தனக்கொரு விளையாடல்போல் கொண்டு நடத்தி உயிர்களின் துன்பங்களைப் போக்கித் தன்னிற் பிறிதாவது ஒன்று இல்லானாய் விளங்கும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது என்று மணிமேகலையுட் கூறப்பட்டதுவே திருவாதவூரடிகளாற் றழுவப்பட்டது என்று மணிவாசகர் சைவக் கொள்கையை இப்பகுதியில் நிறுவுகிறார் (218).

போற்றித் திருவகவலில் 90 ஆம் அடி முதல் 225 ஆம் அடிமுடிய அனைத்தும் போற்றியாய் அமைகின்றன.

66

‘ஆடக மதுரை அரசே போற்றி" (90)

எனத்தொடங்கி, "போற்றி போற்றி சயசய போற்றி” (225)

என நிறைக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/31&oldid=1589160" இலிருந்து மீள்விக்கப்பட்டது